டூயல் SIM வச்சி இருக்குறவங்க லக்கி.. Jio ஆபருக்கு எதிராக Airtel இறக்கியுள்ள Google, AI, 5G, Apple ஆபர்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவானது, தனது நிறுவனத்தின் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.349 திட்டத்தின் மீது பல ஸ்பெஷல் சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் அதே போன்ற விலை நிர்ணயம் கொண்ட ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தின் மீது பல வகையான ஆபர்களை வழங்குகிறது.
ஆக உங்களிடம் டூயல் சிம் கார்டு ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் இருந்தால், அதில் ஒரு ஜியோ சிம் கார்டும், மற்றொன்றில் ஏர்டெல் சிம் கார்டும் இருந்தால்.. நீங்கள் இந்த 2 திட்டங்களின் கீழும், வெவ்வேறு வகையான சலுகைகள் மற்றும் நன்மைகளை ஒரே நேரத்தில் பெறலாம்!

ஆபர் வழங்கும் ஏர்டெல் திட்டம்: ஜியோவிற்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் ஆனது, அதன் ரூ.379 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ், தனது பயனர்களுக்கு கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ், ஏஐ சந்தா மற்றும் வரம்பற்ற 5ஜி ஆகிய கூடுதல் நன்மைகளை வழங்குகிறது
இந்த திட்டத்துடன் டெய்லி 2ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. கூடவே வரம்பற்ற வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டம் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகிறது. இதனுடன், 30ஜிபி கூகுள் கிளவுட் ஸ்டோரேஜையும் வழங்குகிறது.
இதுமட்டுமல்ல. இந்த திட்டத்துடன் ஆப்பிள் மியூசிக் இலவச சந்தா அணுகலும் கிடைக்கும். எல்லாவற்றை விட முக்கியமாக பெர்ப்ளெக்ஸிட்டி உடனான கூட்டாண்மை காரணமாக, ரூ.379 திட்டத்தில் ஏர்டெல் பயனர்கள் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தாவையும் பெறுவார்கள். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி - 1 மாத காலம் ஆகும்.
ஆபர் வழங்கும் ஜியோ திட்டம்: அது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 திட்டமாகும். இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பயனர்கள் இந்த திட்டத்துடன் வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் பெறுவார்கள். மேலும் இந்தத் திட்டத்துடன் ஜியோ டிவி மற்றும் ஜியோக்ளவுட் ஆகிய கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.
மேலும் ஜியோ நிறுவனம் இந்த திட்டத்துடன் ஆண்டுவிழா சலுகை ஒன்றையும் வழங்குகிறது. இந்த சலுகையின் கீழ் ஜியோஃபைனான்ஸ் உடன் கூடுதலாக 2% தங்கம், ஜியோஹோம் 2 மாத இலவச இணைப்பு, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா ஆகிய நன்மைகள் கிடைக்கிறது.
மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.399 தள்ளுபடி (குறைந்தபட்சம் ரூ.1,000 ஆர்டருக்கு ரூ.200 தள்ளுபடி), மூன்று மாத ஜொமாட்டோ கோல்ட், ஒரு மாத ஜியோசாவ்ன், ஆறு மாத நெட்மெட்ஸ் சந்தா, ஈஸ்மைட்ரிப் உள்நாட்டு விமானங்களில் ரூ.2,220 தள்ளுபடி மற்றும் ஹோட்டல்களில் 15% தள்ளுபடி, மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் இலவச 50ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய நன்மைகளும் கிடைக்கிறது.
ரூ.349 திட்டத்துடன் கிடைக்கும் அதே கூடுதல் நன்மைகள் ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.445 திட்டத்துடனும் கிடைக்கிறது. இந்த திட்டம் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் டெய்லி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
சுவாரசியமாக ரூ.445 திட்டமானது - ஜியோடிவி ஆப் வழியாக சோனி லைவ், ஜீ5, லயன்ஸ்கேட் ப்ளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், காஞ்சா லங்கா, பிளானட் மராத்தி, சௌபால், ஃபேன்கோட் மற்றும் ஹோய்சோய் ஆகிய ஓடிடி (OTT) தளங்களுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications