வெறும் ரூ.4-க்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு: ஏர்டெல் அதிரடி!

|

ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவை வெறும் ரூ.4.15-க்கு வரம்பற்ற அழைப்புடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.

1 ஜிபி டேட்டா வெறும் ரூ.4.15

1 ஜிபி டேட்டா வெறும் ரூ.4.15

ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வழங்குகிறது. அது 1 ஜிபி டேட்டா வெறும் ரூ.4.15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை கிடைக்கும் திட்டம் குறித்து பார்க்கலாம்.

இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம்

இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம்

இந்தியாவில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்டெல், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. டேட்டா பேக் திட்டம், வாய்ஸ் கால் திட்டம் என வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப திட்டங்களை வகுத்து நிறுவனம் வழங்குகிறது. ஜியோவின் வருகைக்கு பிறகு மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சரிவை சந்தித்து வந்தாலும், ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்கச் செய்யவும், தக்கவைத்துக் கொள்ளவும் ஏணைய திட்டங்களை வழங்குகிறது.

வரம்பற்ற குரல் அழைப்பு

வரம்பற்ற குரல் அழைப்பு

இதில் ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா ரூ.4.15 என்ற விலையில் வழங்குகிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளும் கிடைக்கிறது.

ரூ.698 விலையில் தினசரி 2 ஜிபி டேட்டா

ரூ.698 விலையில் தினசரி 2 ஜிபி டேட்டா

ஏர்டெல் வழங்கும் ரூ.4.15 விலையில் கிடைக்கும் திட்டம் குறித்து பார்க்கையில் வாடிக்கையாளர்கள் இந்த விலையில் 1 ஜிபி டேட்டாவை பெறலாம். இந்த திட்டம் குறித்து பார்க்கையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.698 என்ற விலையில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்குகிறது என்பதே ஆகும்.

தினசரி 2 ஜிபி டேட்டா வரம்பற்ற அழைப்பு

தினசரி 2 ஜிபி டேட்டா வரம்பற்ற அழைப்பு

இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகை கிடைக்கிறது. ரூ.698-க்கு ரீசார்ஜ் செய்யும் போது தினசரி 2 ஜிபி டேட்டாவை வரம்பற்ற அழைப்புகளோடு, 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்டவைகளை 84 நாட்கள் வேலிடிட்டியோடு வழங்குகிறது.

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் வேகம் குறைப்பு.!

விங்க் மியூசிக், இலவச ஹலோடியூன்ஸ்

விங்க் மியூசிக், இலவச ஹலோடியூன்ஸ்

மேலும் இந்த திட்டத்தில் ஷா அகாடமியின் 1 ஆண்டு சந்தா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியத்தின் இலவச சந்தா ஆகியைவை பெற வாடிக்கையாளர்கள் தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள்.விங்க் மியூசிக், இலவச ஹலோடியூன்ஸ் ஆகிய அணுகலும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

84 நாட்கள் வேலிடிட்டி

84 நாட்கள் வேலிடிட்டி

ஏர்டெல் ரூ.4.15-க்கு 1 ஜிபி டேட்டா வழங்குகிறது என்றாலும் இது ஜியோ வழங்கும் விலையைவிட சற்று அதிகமாகவே உள்ளது. இதே 84 நாட்கள் வேலிடிட்டியோடு தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு சலுகையை ரூ.599 என்ற விலையில் வழங்குகிறது. ஜியோ வழங்கும் இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டாவ ரூ.3.15 என வழங்குகிறது.

VI வோடபோன் ஐடியா

VI வோடபோன் ஐடியா

VI வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள், இது போன்ற திட்டம் ஒன்றை வழங்குகிறது. அதன் விலை ரூ.699 ஆகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 2 ஜிபி டேட்டாவை மட்டுமே பெற்றார்கள். ஆனால் விஐ தற்போது இரட்டை தரவு சலுகையை வழங்குகிறது. எனவே இதே விலையில் வாடிக்கையாளர்கள் தற்போது தினசரி 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமும் 84 நாட்கள் செல்லுபடியாகும்.

1 ஜிபி டேட்டா வெறும் ரூ.2.08

1 ஜிபி டேட்டா வெறும் ரூ.2.08

இதன்மூலம் விஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவை வெறும் ரூ.2.08 என்ற விலையில் வழங்குகிறது. இரட்டை தரவு சலுகை வழங்குவதன் மூலம் விஐ வாடிக்கையாளர்கள்தான் கூடுதல் நன்மைகள் பெறுகிறார்கள் என்பதே நிதர்சணமான உண்மை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Offering 1Gb Data and Unlimited Calling For Rs.4.15

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X