Home
News

Airtel-க்கு குஷி.. வெறும் ரூ.699 போதும்.. 350 டிவி சேனல்.. 22 ஓடிடி ஆப்.. இப்போ ஜீ5 வந்தாச்சு.. 40Mpbs டேட்டா!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தில் வை-பை திட்டங்களை (Wi-Fi Plans) பெற்று வரும் கஸ்டமர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி புது ஓடிடி சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. வெறும் ரூ.699 மதிப்பிலான திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் டேட்டா, 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 22 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனையும் கொடுக்கிறது. இந்த சப்ஸ்கிரிப்ஷனில் இப்போது ஜீ5 (ZEE5) ஓடிடி சந்தாவும் சேர்ந்துள்ளது. இப்படி வை-பை கஸ்டமர்களுக்கு ஜீ5 ஓடிடி சந்தாவுடன் கிடைக்கும் திட்டங்களை தெரிந்து கொள்வோம்.

ஏர்டெல் வை-பை கஸ்டமர்களுக்கு பிராட்பேண்ட் டேட்டா மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் டிவி சேனல்கள் மற்றும் பிரபல ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைத்து வருகிறது. ஒரே செலவில் டேட்டா, டிவி மற்றும் ஓடிடி கிடைப்பதால், கஸ்டமர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், புதிய ஓடிடி ஆப்களை ஏர்டெல் சேர்க்க தொடங்கி இருக்கிறது.

Airtel-க்கு குஷி.. வெறும் ரூ.699 போதும்.. 350 டிவி சேனல்.. 22 ஓடிடி!

இப்போது, ஜீ5 ஓடிடி ஆப் சேர்ந்துள்ளது. இந்த ஓடிடி சந்தாவுடன் இப்போது 6 வை-பை திட்டங்கள் கிடைக்கின்றன. ரூ.699 முதல் ரூ.3,999 வரையில் திட்டங்கள் இருக்கின்றன. இதில் டேட்டா வேகம் மற்றும் ஓடிடி ஆப்களின் அடிப்படையில் விலைகள் இருக்கின்றன. முதலில் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு ரூ.699 மதிப்பில் கிடைக்கும் வை-பை திட்டத்தில் இருந்து தொடங்குவோம்.

இந்த ஏர்டெல் ரூ.699 திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா சலுகை கிடைக்கும். எச்டி சேனல்கள் உள்பட 350+ லைவ் டிவி சேனல்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படும். இதுபோக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் ஜீ5 சந்தாவை பெற்று கொள்ளலாம். இந்த ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், 22+ ஓடிடி ஆப்களின் சந்தா கூடுதலாக கிடைக்கும்.

இந்த 22+ ஓடிடி அடுத்து வரும் அனைத்து திட்டங்களுக்கும் பொருந்தும். ஆனால், முன்னணி ஓடிடிகளில் மாற்றம் இருக்கும். ஆகவே, 22+ ஓடிடி ஆப்களை கடைசியாக பார்த்து கொள்ளலாம். இப்போது அடுத்தடுத்த திட்டங்களின் சலுகைகளை பார்ப்போம். ரூ.899 மதிப்பிலான வை-பை திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை வருகிறது. இதற்கும் ஹாட்ஸ்டார், ஜீ5 கிடைக்கிறது.

அதேபோல 22+ ஓடிடி ஆப்களும் 350+ லைவ் டிவி சேனல்களின் சந்தாவும் கிடைக்கிறது. இதற்கு அடுத்து ரூ.1,099 மதிப்பில் திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பெற்று கொள்ளலாம். 350+ டிவி சேனல்கள் இருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ சந்தாவுடன், ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 சந்தாவை பெறலாம்.

மேலும், 22+ ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் வருகிறது. இதற்கு அடுத்து ரூ.1,599 மதிப்பில் வை-பை திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் முந்தைய திட்டத்தில் அனைத்து ஓடிடி மற்றும் டிவி சேனல்களின் சந்தா கிடைக்கிறது. கூடவே நெட்பிளிக்ஸ் சந்தாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ள முடியும். அடுத்ததாக ரூ.3,999 மதிப்பிலான திட்டம் இருக்கிறது.

இந்த திட்டத்தில் 1 ஜிபிபிஎஸ் டேட்டா வேகம், 350+ டிவி சேனல்கள் மற்றும் ஜீ5, நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் 22+ ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இப்போது 22 ஓடிடி ஆப்களின் எந்தெந்த ஆப்கள் கிடைக்கிறது என்பதை பார்த்துவிடுவோம். இது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே மூலம் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

சன்நெக்ஸ்ட் (SunNxt), ஈராஸ்நவ் (ErosNow), ஆஹா (AHA), சோனிலிவ் (SonyLiv), எபிக் ஆன் (Epic On), டாகுபே (Docubay), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ஹோய்சோய் (HoiChoi), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), ஈராஸ் நவ் (Eros Now), அல்ட்ரா (Ultra), டிவோ (DIVO), ஷீமாரூமீ (Shemaroome) மற்றும்ஃபேன் கோட் (Fan Code)போன்ற ஆப்களும் இந்த சந்தாவில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Offer ZEE5 Subscription Along With 22 OTT Apps For Wi-Fi Customers Plan From Rs 699
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X