Airtel மலை ஏறியாச்சு.. ரீசார்ஜ் முடிஞ்சா.. லோன் எடுக்கலாம்.. கட்டணம் கிடையாது.. வேலிடிட்டி மட்டும்தான்!
டெலிகாம் மார்கெட்டே மிரளும் விதமாக ஏர்டெல் கஸ்டமர்களுக்கு 1 நாள் வேலிடிட்டி லோன் வழங்கப்படுகிறது. ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி முடிந்த பிறகு 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகளை கூடுதலாக பயன்படுத்தலாம். இதற்கு எந்தெந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்?
முன்பெல்லாம், டெலிகாம் மார்கெட்டில் டேட்டா லோன் (Data Loan) மட்டுமே கொடுக்கப்பட்டன. ஆனால், 4ஜி வருகைக்கு பிறகு அதிகப்படியான டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த தொடங்கியதால், டேட்டாவுக்காக மட்டுமே மலிவான விலையில் பிரத்யேமான பல்வேறு திட்டங்கள் வந்து விட்டன. இதனால், டேட்டா லோன் கதையும் முடிந்துவிட்டது.

ஆனால், மாத கடைசியில் ரீசார்ஜ் செய்யாமால், சம்பளம் வந்தவுடன் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என்று காத்திருக்கும் கஸ்டமர்களை கேட்டால், இதுபோன்ற சலுகைகள் மீண்டும் வர வேண்டும் என்றே சொல்வார்கள். அப்படிப்பட்ட கஸ்டமர்களின் வயிற்றில் பாலை வார்த்தது போல ஏர்டெல் நிறுவனம் வேலிடிட்டி லோன் (Airtel Validity Loan) சலுகையை அறிவித்துள்ளது.
இந்த வேலிடிட்டி லோன் (Validity Loan) சலுகையை பெறும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு அவர்கள் ரீசார்ஜ் செய்த திட்டங்களின் வேலிடிட்டி முடிந்த பிறகும் கூடுதலாக 1 நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் சலுகைகள் கிடைக்கும். இந்த கூடுதல் வேலிடிட்டிக்கு கட்டணம் கிடையாது. ஆகவே, அவரச காலங்களில் இந்த வேலிடிட்டி லோன் சலுகை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஏர்டெல் வேலிடிட்டி லோன் பெறுவது எப்படி? இந்த சலுகையை பெற 2 முறைகளை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். முதலில் *567*2# என்ற யுஎஸ்எஸ்டி (USSD) கோட் நம்பருக்கு டயல் செய்வதன் மூலம் வேலிடிட்டி லோன் பெற்று கொள்ளலாம். மற்றொன்று எஸ்எம்எஸ் மூலம் சலுகையை பெறுவது.

அதாவது, 56323 என்ற எண்ணுக்கு 1 என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பினால், ஏர்டெல் வேலிடிட்டி லோன் சலுகையை பெற்று கொள்ள முடியும். இந்த ஒரு நாள் வேலிடிட்டிக்கு கட்டணம் கிடையாது. ஆனால், அடுத்த ப்ரீபெய்ட் வேலிடிட்டி திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது, அதிலிருந்து ஒரு நாள் எடுத்து கொள்ளப்படும்.
அதேபோல இந்த வேலிடிட்டி லோன் சலுகையானது பின் வரும் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கே வழங்கப்படும். ரூ.155, ரூ.179, ரூ.199, ரூ.209, ரூ.239, ரூ.265, ரூ.289, ரூ.296, ரூ.299, ரூ.319, ரூ.329, ரூ.359, ரூ.398, ரூ.399, ரூ.455, ரூ.479, ரூ.489, ரூ.499 ஆகிய ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
மேலும், ரூ.509, ரூ.519, ரூ.549, ரூ.666, ரூ.699, ரூ.719, ரூ.779, ரூ.839, ரூ.869, ரூ.999, ரூ.1499, ரூ.1799, ரூ.2999 மற்றும் ரூ.3359 திட்டங்களை பெற்ற கஸ்டமர்களுக்கும் இந்த லோன் சலுகை கொடுக்கப்படும். அதேபோல அனைத்து மாநிலங்கள் இருக்கும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படவில்லை. முதல்கட்டமாக சில மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
ஆகவே, ராஜஸ்தான் (Rajasthan), கேரளா (Kerala) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) ஆகிய மாநிலங்களை சேர்ந்த ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு இந்த ஏர்டெல் வேலிடிட்டி லோன் சலுகை கொடுக்கப்படுகிறது. வரும் நாட்களில் மற்ற மாநிலங்களிலும் இந்த சலுகை கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








