Home
News

2026 க்கு ஒரே Airtel ரீசார்ஜ்.. மாதம் ரூ.333 க்கு 365 நாட்கள்.. லோக்கல், எஸ்டிடி, ரோமிங்.. 2.5 ஜிபி டேட்டா!

2026 ஆம் ஆண்டின் முதலாவது மாதம் பாதி முடிந்துவிட்டது, இப்போது கூட வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் போதும், வரும் மாதங்களில் ரீசார்ஜ் கட்டணம் உயர்ந்தாலும் கவலைப்பட வேண்டியது கிடையாது. இப்போது, மாதத்துக்கு ரூ.333 செலவில் கிடைக்கும் ஏர்டெல் வருடாந்திர திட்டத்தை பார்ப்போம்.

ஏர்டெல் நிறுவனத்தில் அதிக விலை கொண்ட வருடாந்திர திட்டமாக ரூ.3999 திட்டம் உள்ளது. இது 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, மாத செலவு ரூ.333ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலை அதிகம் போல கஸ்டமர்களுக்கு இருக்கலாம். ஆனால், இதைவிட அதிக டேட்டா சலுகைகள் மற்ற திட்டங்களில் கிடைக்காது.

2026 க்கு ஒரே Airtel ரீசார்ஜ்.. மாதம் ரூ.333க்கு 365 நாட்கள்.. வாய்ஸ்!

வருடம் முழுவதும் டேட்டா தேவைப்படும் கஸ்டமர்கள் ஒரே ரீசார்ஜ் வழியாக அதை சரி செய்து கொள்ளலாம். இதுபோக பிரீமியம் ஓடிடி சந்தாவை இந்த ஏர்டெல் ரூ.3999 திட்டம் கொடுத்துள்ளது. இதைவிட மலிவான விலைக்கும் வருடாந்திர திட்டம் இருக்கிறது. ஆனால், இந்த சலுகைகளை பார்த்துவிட்டு அடுத்த திட்டத்தை தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ. 3999 திட்ட விவரங்கள் (Airtel Rs 3999 Plan Details): 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த 2.5 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கும்.

இந்த டேட்டாவுக்கும் 4ஜி டேட்டாவுக்கும் தொடர்பில்லை. அதாவது, 4ஜி சேவை மட்டுமே கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்கள் 4ஜி டேட்டா இல்லாமலேயே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் போதுமானதாகும்.

இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை போலவே 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் (Unlimited Local, STD, Roaming) கால்களை செய்து கொள்ளலாம். மேலும், வழக்கம்போல நாளொன்றுக்கு கிடைக்கும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இதை 365 நாட்களுக்கும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், 30 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி கொள்ளும்படி ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையை இந்த திட்டம் கொடுத்துள்ளது. இந்த சலுகைகள் போக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா 1 வருடத்துக்கு கிடைக்கிறது. இது மொபைல் சந்தாவாக இருக்கிறது. ரூ.499 விலை கொண்ட இந்த சந்தா முற்றிலும் இலவமாக கொடுக்கப்படுகிறது. வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.

டேட்டா வேண்டாம், வாய்ஸ் கால்கள் மட்டுமே போதுமானால், ஏர்டெல் ரூ. 1849 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதிலும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகை கொடுக்கப்படாது. ஆகவே, 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும்.

ஆனால், நாளொன்றுக்கு கிடைக்காது. 3600 எஸ்எம்எஸ் மொத்தமாக கிடைக்கும். மேலும், ப்ரீ ஹலே டியூன்ஸ் சலுகை உள்ளது. இந்த 2 திட்டங்களுக்கும் ஸ்பேம் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகையானது கூடுதல் கட்டணம் இல்லாமல் கிடைக்கிறது. மேலும், பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தாவும் 12 மாதங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Offer 365 Days Validity Local STD Roaming Calls 2.5GB Data At Rs 333 Monthly Cost
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X