Airtel கஸ்டமர்கள் தலையில் இன்னொரு இடி.. 3 திட்டங்கள் மீது மீண்டும் விலை உயர்வு.. இனி எவ்வளவு?
ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் கஸ்டமர்கள் தலையில் இன்னொரு இடியை இறக்கி உள்ளது. இம்மாத தொடக்கத்தில் (ஜூலை 3 ஆம் தேதி முதல்) அமலுக்கு வந்த புதிய ரீசார்ஜ் கட்டணங்களையே இன்னும் ஜீரணிக்காத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஏர்டெல் கஸ்டமர்களுக்கு - இது பேரிடியாக இருக்கும். அது என்னவென்றால் - ஏர்டெல் நிறுவனம் 3 திட்டங்களின் விலைகளை மீண்டும் உயர்த்தி உள்ளது. அதென்ன திட்டங்கள்? அவைகளின் பழைய விலை என்ன? புதிய விலை நிர்ணயம் என்ன? அவைகள் என்னென்ன நன்மைகளை வழங்கும்? இதோ விவரங்கள்:
01. ஏர்டெல்லின் பெர் டே டேட்டா பேக் (Airtel Per Day Data Pack) ஆன ரூ.181 திட்டம்: தினசரி டேட்டா நன்மையை வழங்கும் இந்த திட்டம் தற்போது ரூ.211 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இது ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா ஒதுக்கீட்டை பயன்படுத்திய பிறகு, ஒரு எம்பிக்கு 50 பைசா கட்டணம் விதிக்கப்படும்.

டேட்டாவை தவிர்த்து இந்த பேக்கில் வேறு எந்த நன்மையும் இல்லை. உங்களுடன் ஏற்கனவே உள்ள பேஸிக் திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டாவிற்கு மேலாக.. ஒரு நாளைக்கு கூடுதலாக 1ஜிபி டேட்டாவை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த திட்டம் உங்கள் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் பேஸ் பேக் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை வழங்கினால், இந்த பேக்கை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு மொத்தம் 2ஜிபி டேட்டா கிடைக்கும்.
02. ஏர்டெல் பல்க் டேட்டா பேக் (Airtel Bulk Data Pack) ஆன ரூ.301 திட்டம்: இந்த ப்ரீபெய்ட் டேட்டா பேக் தற்போது ரூ.361 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இது மொத்தம் 50ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி உங்களுடைய பேஸ் பிளானின் சர்வீஸ் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்.
அதாவது உங்களின் தற்போதைய திட்டத்தில் சுமார் 200 நாட்கள் மீதம் இருந்தால், அந்த 200 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் / தேவைப்படும் போதெலலாம் இந்த 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட ஒதுக்கீட்டை தாண்டிய பின்னர் ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். சுவாரசியமாக இந்த பேக்குடன் ஏர்டெல் விங்க் மியூசிக் பிரீமியம் சந்தாவும் தொகுக்கப்பட்டுள்ளது; இது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.
03. ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா பேக் (Airtel Unlimited Data Pack) ஆன ரூ.79 திட்டம்: தற்போது இது ரூ.99 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த பேக் முற்றிலும் புதியது அல்ல, மாறாக டெலிகாம் சந்தை இயக்கவியலுக்கு ஏற்ப இது சரிசெய்யப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 20ஜிபி என்கிற அளவிலான எப்யூபி அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது மற்றும் இது 2 நாட்கள் செல்லுபடியாகும்.
அதாவது ரூ.99 டேட்டா பேக் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பயனர்கள் 2 நாட்களில் 40ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை அனுபவிக்க முடியும். குறிப்பிட்ட அதிவேக டேட்டா ஒதுக்கீட்டைப் பயன்படுத்திய பிறகு, வாடிக்கையாளர்கள் 64கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.
ஏர்டெல் ப்ரீபெய்ட் பிரிவின்கீழ் தற்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் டேட்டா பேக்குகளின் விலை விவரங்கள்: ஏர்டெல் ப்ரீபெய்டு அன்லிமிடெட் டேட்டா பேக்குகளை பொறுத்தவரை ரூ.11 (1 மணிநேர வேலிடிட்டி), ரூ.49 (1 நாள் வேலிடிட்டி) மற்றும் ரூ.99 (2 நாட்கள் வேலிடிட்டி) ஆகிய திட்டங்கள் உள்ளன.
ஏர்டெல் ப்ரீபெய்ட் லிமிடெட் டேட்டா பேக்குகளை பொறுத்தவரை ரூ.22 (முன்பு ரூ. 19), ரூ.33 (முன்பு ரூ. 29), ரூ.77 (முன்பு ரூ. 65), ரூ.121 (தேங்க்ஸ் ஆப்பில் 5 ஜிபி + கூடுதலாக 2 ஜிபி), ரூ.149 (1 ஜிபி + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே), ரூ.161 (12ஜிபி), ரூ.181 (15ஜிபி + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே), ரூ.211 மற்றும் ரூ.361 ஆகிய திட்டங்கள் உள்ளன!


Click it and Unblock the Notifications








