Home
News

ஏர்டெல்: ரூ.198/-க்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்குகிறது.!

தற்போது, ​​இந்த திட்டம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

By Muthuraj

பார்தி ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய கட்டணத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் 4ஜி / 3ஜி / 2ஜி தரவுகளை வெறும் ரூ.198/- என்ற ரீசார்ஜ் மூலம் பெறலாம். தற்போது, ​​இந்த திட்டம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்: ரூ.198/-க்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.!

டெலிகாம் டாக் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, இந்த பேக் ப்ரீபெய்ட் பயனர்களுக்கானது மற்றும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ளது. இருப்பினும், ஏர்டெல் நிறுவனம் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக பட்டியலிடவில்லை, ஆனால் மைஏர்டெல் பயன்பாட்டின் 'உங்களுக்கான சிறந்த வாய்ப்புகள்' பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும்

தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும்

மேலும், இந்த திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் என்றும் அறிக்கை கூறுகிறது. எனவே, வாசகர்கள் அவர்களின் ஏர்டெல் பயன்பாட்டில் 'சிறந்த சலுகைகள்' ஆப்ஷனில் இந்த திட்டம் இடம்பெற்றுள்ளதா என்பதை முதலில் சோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

சிலருக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள்

சிலருக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள்

இந்த புதிய திட்டம் ஏர்டெல் நிறுவனத்தின் முந்தைய திட்டமான ரூ.199/- வேறுபட்டது. இந்த சிறப்பு திட்டமான ரூ.198/- என்ற ரீசார்ஜ், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவுடன், சில பயனர்களுக்கு உள்ளூர் + எஸ்டிடி + ரோமிங் அழைப்பு நன்மைகளையும், சிலருக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் + எஸ்டிடி) நன்மையையும் வழங்குகிறது.

டாடா டெலி சர்வீசஸ்

டாடா டெலி சர்வீசஸ்

இதற்கிடையில், டாடா டெலி சர்வீசஸ் தனது வாடிக்கையாளர்களை ஏர்டெல் நெட்வொர்க்கிற்கு மாற்ற தொடங்கியுள்ளது. யூபி (மேற்கு), பீகார் மற்றும் மேற்கு வங்காளம் வட்டாரங்களில் இந்த மாற்றத்தின் முதல் தொகுதி செய்யப்படுகிறது. மற்ற வட்டாரங்களின் மொபைல் பயனர்கள் படிப்படியாக ஏர்டெல் பிணையத்திற்குள் குடிபெயர்வார்கள்.

Best Mobiles in India

English summary
Airtel now offers 1GB daily data for Rs 198. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X