ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்த மலிவு விலை திட்டம்.! என்னென்ன நன்மைகள்.!

|

ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் அதிக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது ஏர்டெல் நிறுவனம், எனவே புதிய திட்டங்களை அறிவித்து

வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது இந்நிறுவனம்.

தனது ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தை மீண்டும்

அதன்படி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது, இப்போது இந்த திட்டம் முன்னெப்போதை விடவும் அதிகமான தொலைத் தொடர்பு வட்டாரங்களில் அணுக கிடைக்கிறது.

ஏர்டெல் நிறுவனம்

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் ரூதனது ரூ.399-திட்டத்தை அதன் பட்டியல்களில் இருந்து நீக்கியது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே இந்த திட்டத்தை வழங்கி வந்தது. ஆனாலும் ஏர்டெல் நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோ அதன் போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களை அறிமுகம் செய்த பின்பு, ஏர்டெல் அதன் ரூ.399-திட்டத்தின் மீதான தனது நிலைப்பாட்டை மாற்றியதாகத் தெரிகிறது.

பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நாடலின் ஆடம்பர கைக்கடிகாரம்: விலை என்ன தெரியுமா? என்ன சிறப்பு?

ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளஸ்

மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டமானது 75ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி இயங்குதளங்களுக்கான இலவச சந்தாக்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது என்பது இங்கே குறிப்பிடத்தகக்து.

தமிழ்நாடு உள்ளிட்ட

டெலிகாம் டால்க் வெளியிட்ட தகவலின்படி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399- போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட

ஏர்டெல் பயனர்களின் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் காணப்படுகிறது.

40ஜிபி டேட்டா, வரம்பற்ற

குறிப்பாக ஏர்டெல் ரூ.399-போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 40ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது. கூடுதலாக ஒரு வருடத்திற்கான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்திற்கான சந்தா இலவச விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.150 கேஷ்பேக் போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

ஏர்டெல் ரூ.399-திட்டத்தின் கீழ்

இருந்தபோதிலும் ஏர்டெல் ரூ.399-திட்டத்தின் கீழ் கூடுதல் இணைப்புகளைச் சேர்க்கும் விரும்பம் கிடையாது. ஏர்டெல்லின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி ரூ.499 அல்லது அதற்கு மேற்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை சேவைக்கான தகுதியை பெறுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூறவேண்டும் என்றால் ஏர்டெல்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஆனது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. ஆனால் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டங்களால் ஏர்டெல் திட்டங்கள் அச்சுறுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Now Offering Rs 399 Postpaid Plan And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X