ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ், ரூ.25000 மருத்துவ செலவு! ரூ.239 உட்பட 3 Airtel திட்டங்களில் விபத்து காப்பீடு சேர்ப்பு!
ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் ப்ரீபெய்டு பிரிவில் உள்ள 3 திட்டங்களின் நன்மைகளில் விபத்துக் காப்பீட்டை (Accidental Insurance) சேர்த்துள்ளது. இதற்காக ஏர்டெல் நிறுவனம் ஐசிஐசிஐ லோம்பார்ட் (ICICI Lombard) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஏர்டெல்லின் ஆக்ஸிடென்டல் இன்சூரன்ஸை வழங்கும் 3 திட்டங்களின் விலைகள் என்ன? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இன்சூரன்ஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன? இதோ விவரங்கள்:
என்னென்ன திட்டங்களில் விபத்து காப்பீடு சேர்க்கப்பட்டுள்ளது? டெலிகாம்டால்க்கின் (Telecomtalk) சமீபத்திய அறிக்கையின்படி, ஏர்டெல்லின் ரூ.239, ரூ.399 மற்றும் ரூ.969 ஆகிய 3 திட்டங்களிளிலும் ஆக்ஸிடென்டல் இன்சூரன்ஸ் நன்மை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 3 திட்டங்களையும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ லோம்பார்டுடன் தங்கள் ப்ரொபைல் விவரங்கள் (Profile Details) மற்றும் தனிப்பட்ட தகவல்களை (Personal Details) பகிர்ந்து கொள்ள ஏர்டெல்லை அங்கீகரிப்பார்கள். இதன்மூலம் அவர்களுக்கான இன்சூரன்ஸை உறுதி செய்யப்படும்.

01. ஏர்டெல் ரூ.239 திட்டத்தின் நன்மைகள் (Airtel Rs 239 Plan Benefits): இது ஏர்டெல்லின் ஆக்ஸிடென்டல் இன்சூரன்ஸை வழங்கும் திட்டங்களின் பட்டியலில் உள்ள முதல் மற்றும் மலிவான ரீசார்ஜ் ஆகும். இது 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களுடன் சேர்த்து விபத்துக் காப்பீட்டையும் வழங்குகிறது
இந்த காப்பீட்டின் கீழ் மரணம் அல்லது ஊனம் (Death or disability) ஏற்பட்டால் ரூ.1 லட்சமும், விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் (Hospitalisation due to accident) ரூ.25,000 காப்பீட்டு தொகையும் வழங்கப்படும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 28 நாட்கள் (28 days service validity) ஆகும், ஆனால் காப்பீட்டுத் தொகைக்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
02. ஏர்டெல் ரூ.399 திட்டத்தின் நன்மைகள் (Airtel Rs 399 Plan Benefits): இது டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்கும். விபத்துக் காப்பீட்டை பொறுத்தவரை, 30 நாட்களுக்கு மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சமும், விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.25,000 காப்பீட்டு தொகையும் வழங்கப்படும்.
03. ஏர்டெல் ரூ.969 திட்டத்தின் நன்மைகள் (Airtel Rs 969 Plan Benefits): இது டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்கும். விபத்துக் காப்பீட்டை பொறுத்தவரை, இது 30 நாட்களுக்கு இறப்பு அல்லது ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் மற்றும் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25,000 இன்சூரன்ஸை வழங்கும்.
மேற்கண்ட 3 திட்டங்களிலும் கிடைக்கும் இன்சூரன்ஸ் நன்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and Conditions): முதலாவதாக, இந்த பாலிசி 18 - 80 வயதுக்கு இடைப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் இந்த திட்டத்தின் உறுப்பினர் - ஒரு நிகழ்விற்கு ஒரு பாலிசிக்கு 1 க்ளெய்ம் மட்டுமே (1 claim per policy per event) செய்யலாம். ஒரு பாலிசி காலத்திற்குள் அதிகபட்சம் 3 கிளைம்கள் வரை செய்யலாம்.
ஒருவேளை உங்களிடம் பல ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம்கள் (Airtel Prepaid SIM Cards) இருந்தால், அதிகபட்சமாக ரூ.5,00,000 வரை காப்பீட்டை பெறலாம். ஏர்டெல்லின் ரூ.239, ரூ.399 மற்றும் ரூ.969 ஆகிய 3 திட்டங்களின் கீழும் கிடைக்கும் இந்த பாலிசியானது, இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்த மறுநாள், அதாவது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளின் நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. Source: TelecomTalk (https://telecomtalk.info)


Click it and Unblock the Notifications








