Airtel: இனிமேல் இந்த "சேவை" யாருக்கும் கிடையாது! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

|

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் அல்லது ஏர்டெல் பிராட்பேண்ட் என அழைக்கப்படும் ஏர்டெல்லின் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு வரும்போது, தொழில்துறையில் உள்ள மற்ற பிராட்பேண்ட் திட்டங்களைக் காட்டிலும் கூடுதல் தரவு மற்றும் அழைப்பு நன்மைகளுடன், கூடுதல் நன்மைகளைத் திட்டத்துடன் வழங்கிய ஒரே நிறுவனம் ஏர்டெல் மட்டுமே.

பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட் போர்ட்ஃபோலியோ

பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட் போர்ட்ஃபோலியோ

இதனால் தான் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு ஏர்டெல்லின் திட்டங்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றியது. முன்னதாக, பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட் போர்ட்ஃபோலியோ அமேசான் பிரைம் வீடியோ, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா, இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் சிறந்த நன்மைகளில் ஒன்றாக மூன்று மாத இலவச நெட்ஃபிலிக்ஸ் சந்தா போன்ற சலுகைகளைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது.

நெட்ஃபிலிக்ஸ் நன்மை

நெட்ஃபிலிக்ஸ் நன்மை

ஆனால், ஒரு புதிய மாற்றத்துடன் அனைத்து பாரதி ஏர்டெல் திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளன, அவற்றில் பிராட்பேண்ட் அல்லது போஸ்ட்பெய்ட் பயனர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்து பயனர்களிடமிருந்து நெட்ஃபிலிக்ஸ் நன்மை பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட், ரூ.999 மதிப்புள்ள ஒரு ஆண்டு அமேசான் பிரைம் சந்தாவை வழங்குகிறது.

ஜியோ நிறுவனத்தின் 6பைசா கட்டணம்: இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? எவ்ளோ நாட்கள் நீடிக்கும்?ஜியோ நிறுவனத்தின் 6பைசா கட்டணம்: இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? எவ்ளோ நாட்கள் நீடிக்கும்?

நெட்ஃபிலிக்ஸ் நன்மை ஏன் பறிக்கப்பட்டது?

நெட்ஃபிலிக்ஸ் நன்மை ஏன் பறிக்கப்பட்டது?

நெட்ஃபிலிக்ஸ் நன்மையை நிறுத்தப்படுவதற்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வந்தது, அப்போது அனைத்து திட்டங்களுக்கும் இந்த நன்மை நிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. பாரதி ஏர்டெல் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் இடையேயான கூட்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சரியான நேரத்தில் சந்தாவை எடுத்த சந்தாதாரர்களுக்கு இந்த சேவை தொடர்ந்து அனுபவிக்கக் கிடைக்கிறது.

நெட்ஃபிலிக்ஸ் சந்தா உடன் கிடைக்கும் திட்டங்களின் விபரங்கள்

நெட்ஃபிலிக்ஸ் சந்தா உடன் கிடைக்கும் திட்டங்களின் விபரங்கள்

இப்போது கேள்வி என்னவென்றால், சந்தாதாரர்களுக்கு நெட்ஃபிலிக்ஸ் நன்மையை வழங்கும் ஏதேனும் பிராட்பேண்ட் அல்லது போஸ்ட்பெய்ட் திட்டம் உள்ளதா? இதற்கான குறுகிய பதில் ஆம் இருக்கிறது. நெட்ஃபிலிக்ஸ் சந்தா நன்மையுடன் திட்டத்தைத் தேடும் பயனர்களுக்கு ACT ஃபைபர்நெட் நிறுவனம் ஒரு சலுகையை வைத்துள்ளது. இதன்படி உங்களுக்கு நெட்ஃபிலிக்ஸ், கேஷ்பேக் சலுகையுடன் கிடைக்கிறது.

கண்கலங்க வைத்த பெண்: ஒரே ட்விட்டில் 12 பேரில் இருந்து 32.8K ஃபாலோவர்கள்- அப்படி என்ன ட்விட் தெரியுமாகண்கலங்க வைத்த பெண்: ஒரே ட்விட்டில் 12 பேரில் இருந்து 32.8K ஃபாலோவர்கள்- அப்படி என்ன ட்விட் தெரியுமா

ACT ஃபைபர்நெட் வழங்கும் நெட்ஃபிலிக்ஸ்

ACT ஃபைபர்நெட் வழங்கும் நெட்ஃபிலிக்ஸ்

இப்போது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ACT ஃபைபர்நெட் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச நெட்ஃபிலிக்ஸ் சந்தாவை வழங்கவில்லை என்றாலும் கூட, சந்தாதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகையைவழங்குகிறது. நெட்ஃபிலிக்ஸ் சந்தாவுக்கான கட்டணத்துடன், ACT GIGA திட்டம் போன்ற உயர் திட்டங்களுடன் ரூ.50 முதல் ரூ.500 வரையிலான கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இருப்பினும் ஏர்டெல்லுக்கு நிகராக Act வரவில்லை.

வோடபோன் REDX திட்டத்துடன் கிடைக்கும் நெட்ஃபிலிக்ஸ் நன்மை

வோடபோன் REDX திட்டத்துடன் கிடைக்கும் நெட்ஃபிலிக்ஸ் நன்மை

பாரதி ஏர்டெல் வழங்கிய நெட்ஃபிலிக்ஸ் சந்தா நன்மையுடன் உண்மையில் போட்டியிடும் ஒரே திட்டம் வோடாபோனின் REDX திட்டம் மட்டும் தான். உண்மையில் பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களை வென்று, பயனர்களுக்குக் கூடுதல் நன்மையாக நெட்ஃபிலிக்ஸ் சந்தாவை, நம்ப முடியாத அதிக பயனுடன் வழங்க வோடபோன் மட்டுமே முயற்சி செய்து, வோடபோன் REDX திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Xiaomi Mi MIX Fold: வரவிருக்கும் அடுத்த சியோமி போல்டபில் ஸ்மார்ட்போன் இதுதான்!Xiaomi Mi MIX Fold: வரவிருக்கும் அடுத்த சியோமி போல்டபில் ஸ்மார்ட்போன் இதுதான்!

வோடபோன் REDX திட்டத்தின் நம்ப முடியாத பயன்

வோடபோன் REDX திட்டத்தின் நம்ப முடியாத பயன்

வோடபோன் REDX திட்டத்தைப் பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், நெட்ஃபிலிக்ஸ் சந்தாவுடன் வரும்போது, ​​பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்கள் மூன்று மாத நெட்ஃபிலிக்ஸ் நன்மையை மட்டுமே வழங்குகிறது என்றாலும் கூட. வோடபோன் நிறுவனத்தின் வோடபோன் REDX திட்டம் ஒரு முழு ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் சந்தாவைப் பயனர்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் நன்மையுடன் 150 ஜிபி டேட்டா வேண்டுமா?

கூடுதல் நன்மையுடன் 150 ஜிபி டேட்டா வேண்டுமா?

இத்துடன் வோடபோன் REDX திட்டம் தற்போது தொழில்துறையில் ஒரு மாதத்திற்கு 150 ஜிபி தரவு வரம்பைக் கொண்ட தனித்துவமான போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இத்துடன் வோடபோன் REDX திட்டம் பயனர்களுக்கு சில தனித்துவமான நன்மைகளையும் வழங்குகிறது. விமான டிக்கெட்களின் மேல் கிடைக்கும் சலுகைகள் அணுகல் மற்றும் ஹோட்டல்களில் தள்ளுபடிகள் போன்றவற்றையும் தருகிறது.

Best Mobiles in India

English summary
Airtel: No one has this service anymore Clients are shocked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X