Home
News

உங்ககிட்ட Airtel SIM இருக்கா.. பழையபடி ரூ.200 க்கு இறங்கிடுச்சு.. ஆனா ஒரு டிவிஸ்டு.. Jio-க்கு டெஸ்ட்டு!

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.200 பிளானை பார்த்ததும், ஆஹா தாறுமாறாக ஏறிய ரீசார்ஜ் விலையானது, பழையபடி ரூ.200 க்கு இறங்கிவிட்டது என்று நினைத்து, அவசரப்பட்டு ரீசார்ஜ் செய்துவிட வேண்டாம். உங்களிடம் ஏர்டெல் சிம் கார்டு இருந்தால், ஏர்டெல் நெட்வொர்க்கின் கீழ் ரூ.200 க்கு, ஒரு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தான். வழக்கம் போல இதுவும் ஜியோவிற்கு போட்டியாக வந்துள்ள திட்டம் தான். ஆனால் ஒரு டிவிஸ்டு!

அது என்னவென்றால், பார்தி ஏர்டெல்லின் புதிய ரூ. 200 திட்டமானது ஒரு ப்ரீபெய்ட் ஆட்-ஆன் பேக் (Prepaid Add-on Pack) ஆகும். 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டம் 30ஜிபி டேட்டா, ஓடிடி நன்மைகள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. கூடுதல் டேட்டா மற்றும் பிரீமியம் ஓடிடி கன்டென்ட்டை அணுக விரும்பும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த ஆட்-ஆன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Airtel பழையபடி ரூ.200 க்கு இறங்கிடுச்சு.. ஆனா ஒரு டிவிஸ்டு!

ஏர்டெல்லின் ரூ. 200 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக்கின் நன்மைகள்: இதுவொரு ஆட்-ஆன் பேக் ஆக இருந்தாலும் 28 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இந்த காலகட்டத்தில் 30ஜிபி ஹைஸ்பீட் டேட்டா கிடைக்கும். மேலும் திட்ட விவரங்களின்படி, 5ஜி நெட்வொர்க் உள்ள பகுதிகளில் மட்டும், வழக்கமான டேட்டா ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக பயன்படுத்தக்கூடிய அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் சமீபத்தில் தனது ரூ.200 'மெகா கன்டென்ட் ஆட்-ஆன்' திட்டத்தை ஓடிடி பாஸ்' (OTT Pass) ஆக மாற்றியமைத்தது. இதில் 15 ஓடிடி ஆப்களுக்கான அணுகல், வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் 30ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கிறது. இதற்கு போட்டியாகவே ஏர்டெல்லின் ரூ.200 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஏர்டெல் ரூ.200 ப்ரீபெய்ட் ஆட்-ஆன் டேட்டா பேக்கின் கீழ் என்னென்ன ஓடிடி நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சந்தாதாரர்களுக்கு ரூ.149 மதிப்புள்ள 28 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மொபைல் சந்தா வழங்கப்படும். இதன் மூலம் மொபைல் டிவைஸ்களில் லைவ் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் மற்றும் பிற பொழுதுபோக்கு கண்டென்ட்களை அணுக முடியும்.

மேலும், 28 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் (Airtel Xstream Play Premium) சேவையும் இதில் அடங்கும். இதன் மூலம் சோனி லைவ் (Sony LIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஆஹா பிரீமியம் (Aha Premium), சொவ்பால் (Chaupal), சன் நெக்ஸ்ட் (SunNXT) உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களை அணுகலாம்.

டேட்டா ஒதுக்கீடு (Data usage) தீர்ந்த பிறகு கட்டணம்: பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ரூ.200 திட்ட விவரங்களின் படி, இதில் வழங்கப்பட்ட 30ஜிபி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, கூடுதல் பயன்பாட்டிற்கு ஒரு எம்பி-க்கு 50 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரே ரீசார்ஜ் மூலம் தங்கள் டேட்டா அளவை அதிகரிக்கவும், ஓடிடி ஸ்ட்ரீமிங் வசதிகளை விரிவுபடுத்தவும் விரும்பும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டுமே இது பொருத்தமானதாக இருக்கும். இந்த ரூ.200 டேட்டா பேக் இப்போது ஏர்டெல்லின் இணையதளம் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) ஆப் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.200 டேட்டா பேக்கின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.200 திட்டம் ஆனது ஓடிடி பாஸ் (OTT pass) என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் 4ஜி டேட்டாவுடன் ஏராளமான ஓடிடி தளங்களுக்கான அணுகலையும் இது வழங்குவதால், ஜியோ நிறுவனம் இத்திட்டத்தை ஓடிடி பாஸ் என்று முன்னிலைப்படுத்துகிறது.

இந்த ரூ.200 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் (validity) கொண்டுள்ளது. இத்திட்டத்தில் பயனர்களுக்கு 30ஜிபி டேட்டா கிடைப்பதுடன், YouTube Premium, Amazon Prime Video, JioHotstar, SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanccha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, Times Play, Tarang Plus மற்றும் JioTV போன்ற ஓடிடி நன்மைகளும் கிடைக்கின்றன.

எந்தவொரு டேட்டா பேக்கை போலவும், ரூ.200 திட்டமும் கூட, பயனரிடம் ஏற்கனவே சர்வீஸ் வேலிடிட்டி கொண்ட பேஸிக் ப்ரீபெய்ட் திட்டம் (base prepaid plan) ஆக்டிவ் ஆக இருந்தால் மட்டுமே, அதற்கு மேல் இதை ரீசார்ஜ் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
Airtel New Rs 200 Prepaid Add on Data Pack Plan Introduced Offers 30GB Data Premium OTT for 28 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X