10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!

|

நீங்கள் ஒரு ஏர்டெல் யூசர் என்றால்.. ஏற்கனவே Airtel வழங்கும் பல வகையான இலவச மற்றும் கூடுதல் நன்மைகளில் மூழ்கி திளைக்கிறீர்கள் என்றால், அந்த பட்டியலில் மேலொரு இலவசம் வந்து சேர்ந்துள்ளது.

அதென்ன இலவசம்? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது யாருக்கெல்லாம் அணுக கிடைக்கும்? இந்த இலவச சலுகையை பெறுவது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்!

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்!

ஏர்டெல் நிறுவனம் பல வகையான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குவதோடு சேர்த்து ஏர்டெல் பிளாக் (Airtel Black) திட்டங்களையும் வழங்குகிறது என்பதை நீங்கள் அறிந்து இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம், இது கடந்த 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அறியாதோர்களுக்கு ஏர்டெல் பிளாக்கின் கீழ், நீங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்டெல் சேவைகளை - ஒரே பில்லின் கீழ் - பெறலாம். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஃபைபர், டிடிஎச், மொபைல் போன்ற சேவைகளை ஏர்டெல் பிளாக்கின் கீழ் ஒன்றாக இணைக்கலாம்.

பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!

ஸ்பெஷலான கவனிப்புகளும் கிடைக்கும்!

ஸ்பெஷலான கவனிப்புகளும் கிடைக்கும்!

பல சேவைகளை ஒன்றாக இணைக்கும் ஏர்டெல் பிளாக் திட்டங்கள் ஆனது, அதன் வாடிக்கையாளர்களுக்கு "சிங்கிள் பில்" ஐ வழங்குவதோடு நில்லாமல் ஒரு பிரத்யேக ரிலேஷன்ஷிப் மேனேஜர்கள் குழுவுடன் உங்களை இணைக்க உதவும் ஒரு கஸ்டமர் கேர் நம்பர் மற்றும் தவறுகள் & சிக்கல்களைத் தீர்க்க முன்னுரிமை போன்ற ஸ்பெஷல் கவனிப்புகளையும் வழங்குகிறது.

ஒரு மாத வாடகை ஃப்ரீ!

ஒரு மாத வாடகை ஃப்ரீ!

அப்படியான ஏர்டெல் பிளாக் திட்டங்களின் கீழ், 30 நாட்களுக்கு இலவச சேவையை வழங்கும் ஒரு சலுகையை பார்தி ஏர்டெல் அறிவித்துள்ளது.

இந்த சலுகையின் கீழ், டிடிஎச், பிராட்பேண்ட் அல்லது போஸ்ட்பெய்டு என எந்தவொரு புதிய சேவைக்கும் சந்தா செலுத்தும் யூசர்களுக்கு, அவர் செலுத்திய தொகையின் மீது (30 நாட்கள் என்கிற கணக்கின் கீழ்) தள்ளுபடி அணுக கிடைக்கும்.

ஒரே நாளில் 5 தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் Realme; இதோ முழு லிஸ்ட்!ஒரே நாளில் 5 தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் Realme; இதோ முழு லிஸ்ட்!

எடுத்துக்காட்டுக்கு..!

எடுத்துக்காட்டுக்கு..!

உதாரணமாக, நீங்கள் ரூ.1099 திட்டத்தின் கீழ் - முதல் மாதம்; முதல் பில்லில் - ரூ.1099 என்கிற தள்ளுபடியை பெறுவீர்கள். 30 நாட்களுக்குப் பிறகு நீங்கள் "வழக்கமான" வாடகை தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.

ஒருவேளை (குறிப்பிட்ட முதல் 30 நாட்களில்) நீங்கள் வேறு ஏதேனும் சேவைகளை உபயோகப்படுத்தி இருந்தால், அது உங்களுக்கான பில்லில் சேர்க்கப்படும் என்பதும், இந்த ஏர்டெல் பிளாக் சலுகை ஆனது நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு மொபைல் கனெக்ஷனை கொண்டவர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உங்கள் தேவைக்கேற்ப கஸ்டம் திட்டங்களையும் உருவாக்கலாம்!

உங்கள் தேவைக்கேற்ப கஸ்டம் திட்டங்களையும் உருவாக்கலாம்!

இங்கே இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், ஏர்டெல் பிளாக்கின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப 'கஸ்டம்' திட்டங்களையும் உருவாக்கலாம் அல்லது ஏர்டெல்லில் இருந்து அணுக கிடைக்கும் ஸ்டாண்டர்ட் ஏர்டெல் பிளாக் திட்டங்களையும் பெறலாம்.

சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா "இதை" UNINSTALL பண்ணுங்க.. கதறும் Google!

ஏர்டெல் பிளாக்கின் கீழ் என்னென்ன திட்டங்கள் கிடைக்கிறது?

ஏர்டெல் பிளாக்கின் கீழ் என்னென்ன திட்டங்கள் கிடைக்கிறது?


ஏர்டெல் பிளாக்கின் கீழ் ரூ.699, ரூ.1099, ரூ.1098, ரூ. 2099, ரூ. 998 மற்றும் ரூ.1598 என்கிற விலையின் கீழ் 6 திட்டங்கள் அணுக கிடைக்கிறது. இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான நன்மைகளை வழங்குகின்றன.

ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி, மேற்குறிப்பிட்ட 6 திட்டங்களில் ரூ.998-ஐ தவிர்த்து மீதமுள்ள 5 திட்டங்களும் முதல் 30 நாட்களுக்கு இலவசமாக அணுக கிடைக்கும்.

இந்த ஏர்டெல் பிளாக் திட்டங்களை பெறுவது எப்படி?

இந்த ஏர்டெல் பிளாக் திட்டங்களை பெறுவது எப்படி?

ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து ஏர்டெல் பிளாக் திட்டங்களை பெற பல வழிகள் உள்ளன.

நீங்கள் நிறுவனத்தின் ஆஃப்லைன் ஸ்டோருக்குச் செல்லலாம்; அங்கே ஏர்டெல் எக்சிகியூட்டிவ் உங்களுக்கு உதவுவார் அல்லது https://www.airtel.in/airtel-black என்கிற வலைத்தளத்திற்கு சென்று உங்கள் விவரங்களை உள்ளிடவும், அதனை தொடர்ந்து ஏர்டெல் நிர்வாகி ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார்.

இல்லையேல் 8826655555 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும். அதனை தொடர்ந்து ஒரு ஏர்டெல் எக்சிகியூட்டிவ் உங்களை ஏர்டெல் பிளாக்கிற்கு அப்கிரேட் செய்யும் நோக்கத்தின் கீழ் உங்களை தொடர்பு கொள்வார்.

SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!

ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் அல்லது மிஸ்டு கால் வழியாக ஏர்டெல் பிளாக்-ஐ பெறுவது எப்படி?

ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் அல்லது மிஸ்டு கால் வழியாக ஏர்டெல் பிளாக்-ஐ பெறுவது எப்படி?

நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை இன்ஸ்டால் செய்தும் ஏர்டெல் பிளாக் திட்டத்தை பெறலாம். இதன் கீழ் நீங்கள் ஏற்கனவே பெறும் சேவைகளை தொகுத்து உங்களுக்கான சொந்த திட்டத்தையும் உருவாக்கலாம்.

ஒருவேளை நீங்கள் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர் ஆக அல்லது ஏர்டெல் போஸ்ட்பெய்டு யூசராக இல்லாவிட்டால், ஏர்டெல் பிளாக்கின் பிரத்யேக பலன்களைப் பெற ஏர்டெல் போஸ்ட்பெய்டுக்கு போர்ட் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel New Offer For Its Postpaid Customers 30 Days Free Services on Airtel Black Plans. Check Details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X