Home
News

Airtel கலக்குறீயே.. 1GB இல்ல 2GB இல்ல 25GB இலவசம்.. புதிய ஆபர்.. 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்த கையோடு!

டிராய் (TRAI) உத்தரவின்படி ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கான புதிய வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்களை அறிமுகம் செய்து, அவைகள் எதிர்பார்த்த அளவிற்கு மலிவாக இல்லை என்றதுமே, அவைகளின் விலைகளை உடனே திருத்தி அமைத்து.. "அப்பாடா ஏர்டெல் (Airtel) நிறுத்திடுச்சுப்பா!" என்று நினைக்கும் சமயத்தில், ஒரு புதிய ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது!

பார்தி ஏர்டெல் நிறுவனமானது தனது ப்ரீபெய்ட் பயனர்களை, ஏர்டெல் போஸ்ட்பெய்டுக்கு அப்கிரேட் ஆக ஊக்குவிக்கும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்கீழ் 25ஜிபி அளவிலான டேட்டா இலவசமாக கிடைக்கிறது. ஏர்டெல்லின் பேஸிக் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை என்ன? இதன்கீழ், 25ஜிபி இலவச டேட்டாவோடு சேர்த்து ஏர்டெல் நிறுவனம் அதன் போஸ்ட்பெய்டு சேவைக்கு இடம்பெயரும் பயனர்களுக்கு என்னென்ன வழங்குகிறது? இதோ விவரங்கள்:

Airtel கலக்குறீயே.. 1GB இல்ல 2GB இல்ல 25GB இலவசம்.. புதிய ஆபர்!

சமீபத்திய கட்டண திருத்தங்களுக்கு பின்னர் - ஏர்டெல்லின் இன்ஃபினிட்டி ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டம் தான் அதன் பயனர்களுக்குக் கிடைக்கும் நுழைவு நிலை போஸ்ட்பெயிட் விருப்பமாகும். மாதத்திற்கு ரூ.449 என்கிற செலவின் கீழ் கிடைக்கும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங்), ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மாதத்திற்கு 50 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் பிரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு அப்கிரேட் ஆகியிருந்தால் "வழக்கமான" 50ஜிபி டேட்டாவுடன் சேர்ந்து "கூடுதலாக" 25 ஜிபி டேட்டா என மொத்தம் மாதத்திற்கு 75ஜிபி டேட்டா கிடைக்கும். இதோடு 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் ஆதரவும் கிடைக்கும். இதன்கீழ் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு நகர்த்த முடியும்.

ஒருவேளை நீங்கள் டேட்டா நன்மை முழுவதையும் பயன்படுத்தி விட்டீர்கள் என்றால், டேட்டா சேவைகள் நிறுத்தப்படும், பின்னர் ஒரு எம்பிக்கு 2 பைசா என்கிற அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படும். ரூ.449 திட்டத்தின் கீழ் ஏர்டெல் ரிவார்ட்ஸ் நன்மையின் கீழ் அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், 3 மாதங்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா, இலவச ஹெலோ ட்யூன்ஸ் மற்றும் Blue Ribbon Bag சேவை ஆகியவைகளும் கிடைக்கும்

ரூ.449-ஐ ரீசார்ஜ் செய்யும் போஸ்ட்பெய்ட் பயனர்கள் மேற்கண்டஅனைத்து நன்மைகளையும் ஒரே சிம் கார்டில் பெறுவார்கள் 3 மாதங்களுக்குப் பிறகு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மாதத்திற்கு ரூ.99 என்கிற கட்டணத்தின் கீழ் அணுக கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த ஓடிடி சேவையை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி டிராய் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சில தினங்களுக்கு முன்னர், ஏர்டெல் நிறுவனமானது அதன் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 2 புதிய வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை (ரூ.499 மற்றும் ரூ.1959) அறிமுகப்படுத்தி இருந்தது. பின்னர் இந்த திட்டங்கள் முறையே ரூ.30 மற்றும் ரூ.110 விலை குறைப்பை பெற்று தற்போது ரூ.469 மற்றும் ரூ.1849 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

ஏர்டெல் ரூ.469 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 469 Voice and SMS Only Plan): இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும் (மாதாந்திர செலவு ரூ.156). கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1849 Voice and SMS Only Plan): இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும் (மாதாந்திர செலவு ரூ.154). கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel New Offer Additional 25GB Data For The Customers Who Upgrade From Prepaid To Postpaid
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X