Airtel கஸ்டமர்கள் காட்டில் மழை.. ஜூன் 18 வரை ஸ்பெஷல் ஆபர்.. ரூ.99 க்கு ரீசார்ஜ் செய்தால்?
ஏர்டெல் (Airtel) நிறுவனம் தனது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா திட்டத்தில் ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.99 கட்டணத்தில் 20 ஓடிடி தளங்களின் கன்டென்ட்களை அணுக முடியும்.
இந்த சிறப்பு விலை சலுகை ஜூன் 18, 2026 வரை அமலில் இருக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல ஸ்ட்ரீமிங் சேவைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம், பிரீமியம் ஓடிடி கன்டென்ட்களை எளிதாக அணுகும் வாய்ப்பை ஏர்டெல் இந்த சலுகையின் மூலம் வழங்குகிறது.

ரூ.99-க்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவின் கீழ்என்னென்ன கிடைக்கும்? ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் என்பது பல்வேறு ஓடிடி நிறுவனங்களின் கன்டென்ட்களை ஒரே ஆப்பிற்குள் ஒருங்கிணைக்கும் ஏர்டெல்லின் தளமாகும். தற்போதைய சிறப்பு சலுகையின் கீழ், தகுதியுள்ள பயனர்கள் மாதம் ரூ.99 கட்டணத்தில் இந்த சேவையை சப்ஸ்க்ரைப் சந்தா செய்து, 20 ஓடிடி தளங்களில் உள்ள பொழுதுபோக்கு கன்டென்ட்களை அணுகலாம்.
இந்த சேவையின் கீழ் Netflix, Sony LIV, Lionsgate Play, PlayFlix, Eros Now மற்றும் பல ஸ்ட்ரீமிங் சேவைகளின் கன்டென்ட்கள் உள்ளன. மேலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே தளம் மூலம் பயனர்கள் திரைப்படங்கள், வெப் சீரீஸ் (web series), நேரலைலைவ் டிவி சேனல்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு கன்டென்ட்களையும் பார்க்கலாம் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இந்த சந்தா சேவை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு - ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) ஆப் மற்றும் 'ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே' ஆப் ஆகியவற்றின் மூலமாக கிடைக்கிறது. அதாவது இதில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே தளம் வழியாக சந்தாவை பெறலாம்.
இந்த சமீபத்திய சலுகையின் மூலம், ஒரே சந்தாவின் கீழ் பல ஓடிடி சேவைகளை அணுகும் வசதியை வழங்கி, ஏர்டெல் தனது பொழுதுபோக்கு சேவைகளை விரிவுபடுத்துகிறது. பல்வேறு ஸ்ட்ரீமிங் தளங்களின் கன்டென்ட்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, பயனர்களுக்கு ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் ஏர்டெல் நிறுவனத்தின் உத்தியை - இந்த சலுகை மேலும் வலுப்படுத்துகிறது.
ஜியோ வழங்கும் 2 ஓடிடி திட்டங்கள்: முகேஷ் அம்பானி தலைமையிலான, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), அதன் பயனர்களுக்காக ரூ.195 மற்றும் ரூ.200 விலையிலான டேட்டா பேக்குகளை வழங்குகிறது. இந்த இரண்டு டேட்டா வவுச்சர்களில் ரூ.200 பிளான் ஆனது ஓடிடி பாஸ் என்று அழைக்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.200 டேட்டா பேக்கின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.200 திட்டம் ஆனது ஓடிடி பாஸ் (OTT pass) என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் 4ஜி டேட்டாவுடன் ஏராளமான ஓடிடி தளங்களுக்கான அணுகலையும் இது வழங்குவதால், ஜியோ நிறுவனம் இத்திட்டத்தை ஓடிடி பாஸ் என்று முன்னிலைப்படுத்துகிறது.
இந்த ரூ.200 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் (validity) கொண்டுள்ளது. இத்திட்டத்தில் பயனர்களுக்கு 30ஜிபி டேட்டா கிடைப்பதுடன், YouTube Premium, Amazon Prime Video, JioHotstar, SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanccha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, Times Play, Tarang Plus மற்றும் JioTV போன்ற ஓடிடி நன்மைகளும் கிடைக்கின்றன.
எந்தவொரு டேட்டா பேக்கை போலவும், ரூ.200 திட்டமும் கூட, பயனரிடம் ஏற்கனவே சர்வீஸ் வேலிடிட்டி கொண்ட பேஸிக் ப்ரீபெய்ட் திட்டம் (base prepaid plan) ஆக்டிவ் ஆக இருந்தால் மட்டுமே, அதற்கு மேல் இதை ரீசார்ஜ் செய்ய முடியும். அதாவது 28 நாள் வேலிடிட்டி என்பது ஓடிடி நன்மைகளுக்கான வேலிடிட்டி ஆகும்; டேட்டா பேக்கின் வேலிடிட்டி அல்ல மற்றும் இதன்கீழ் எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் காலிங் நன்மைகள் எதுவும் கிடைக்காது. ஆனால் IPTV மூலம் 1000-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை அணுகலாம்; இவைகள் லைவ் டிவி சேனல்கள் ஆகும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.195 டேட்டா பேக்கின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.195 டேட்டா பேக்கிலும் ஓடிடி பலன் அடங்கியுள்ளது. இருப்பினும், இதில் JioHotstar-க்கான அணுகல் மட்டுமே கிடைக்கிறது. ரூ.195 டேட்டா பேக்கின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். இத்திட்டத்தில் பயனர்களுக்கு 15ஜிபி டேட்டா கிடைக்கிறது.
ஆனால் இந்த திட்டத்துடன் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் 15ஜிபி டேட்டாவும் 4ஜி டேட்டா ஆகும். மேலும் பயனரிடம் ஏற்கனவே ஒரு அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் (base prepaid plan) செயல்பாட்டில் இருந்தாலும் மட்டுமே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். வழக்கம் போல இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் எதுவும் இல்லை.


Click it and Unblock the Notifications