Airtel-க்கு கும்பிடு.. 4G முடிந்தது.. மினிமம் ரூ.51-க்கு 5ஜி திட்டங்கள்.. புதுசா வந்தாச்சு.. அன்லிமிடெட் தான்!
இப்போதான் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டங்களின் கட்டண உயர்வுக்கு மெல்ல மெல்ல அதன் கஸ்டமர்கள் பழகி வருகின்றனர். ஆனால், ஏர்டெல் நிறுவனம் விடுவதாக இல்லைபோல, சூட்டோடு சூடாக மூன்று அன்லிமிடெட் 5ஜி திட்டங்களை களமிறக்கி இருக்கிறது. வெறும் ரூ.51 விலையில் திட்டங்கள் தொடங்குவதால் மற்ற டெலிகாம் கஸ்டமர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த மூன்று அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களின் (Unlimited 5G Data Plan) முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
என்னதான் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு டெலிகாம் கஸ்டமர்கள் படையெடுத்தாலும், அந்த நிறுவனத்தில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு நிகரான டேட்டா வேகம் கிடைக்காது என்பதே உண்மை. சொல்லப்போனால், இந்த 2 நிறுவனங்களும் 4ஜிக்கு அடுத்து 5ஜி சேவையில் முழு கவனத்தையும் செலுத்து வருகின்றன. இதில், ஏர்டெல் நிறுவனமானது, 5ஜி திட்டங்களை இப்போது களமிறக்கிவிட்டது.

முன்னதாக, ஏர்டெல் திட்டங்களின் விலை உயர்த்தப்பட்டபோது, தினசரிக்கு 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டா சலுகை கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்தாலே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவையை பெற்று கொள்ளலாம் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்தது. இதுபோன்ற திட்டங்களுக்காக இப்போது மூன்று அன்லிமிடெட் 5ஜி டேட்டா பூஸ்டர் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த டேட்டா திட்டங்கள் முழுக்க முழுக்க 5ஜி சேவையை கொடுக்கும் திட்டங்களாகும். ரூ.51 முதல் தொடங்குகின்றன. அதன்படி ரூ.51 மதிப்பிலான திட்டத்தில், 3 ஜிபி டேட்டாவும், ரூ.101 மதிப்பிலான திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவும், ரூ.151 மதிப்பிலான திட்டத்தில் 9 ஜிபி டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு உங்களது கரண்ட் திட்டத்தின் வேலிடிட்டி கிடைக்கிறது.
இந்த 5ஜி டேட்டா திட்டங்கள் மூலம், வரும் நாட்களில் 4ஜிக்கு அடுத்தபடியாக ஏர்டெல் 5ஜி சேவைக்கான ப்ரீபெய்ட் (Airtel 5G Prepaid Plan) மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதியாகிவிட்டது. இப்போது, ஏர்டெல் நிறுவனம் அறிவித்த திட்டங்களின் கட்டண உயர்வை பார்ப்போம்.
ஏர்டெல்லில் 28 நாட்கள் வேலிடிட்டி/2ஜிபி டேட்டா கொண்ட ரூ.179 திட்டம் ரூ.199ஆகவும், 84 நாட்கள் வேலிடிட்டி/6ஜிபி டேட்டா கொண்ட ரூ.455 திட்டம் ரூ.509ஆகவும், 28 நாட்கள் வேலிடிட்டி/1ஜிபி தினசரி டேட்டா கொண்ட ரூ.265 திட்டம் ரூ.299ஆகவும், 28 நாட்கள் வேலிடிட்டி/1.5ஜிபி தினசரி டேட்டா கொண்ட ரூ.299 திட்டம் ரூ.349ஆகவும் அதிகரித்துள்ளது.
அதேபோல 28 நாட்கள் வேலிடிட்டி/2.5ஜிபி தினசரி டேட்டா கொண்ட ரூ.359 திட்டம் ரூ.409ஆகவும், 28 நாட்கள் வேலிடிட்டி/3ஜிபி தினசரி டேட்டா கொண்ட ரூ.399 திட்டம் ரூ.449ஆகவும், 56 நாட்கள் வேலிடிட்டி/1.5ஜிபி தினசரி டேட்டா கொண்ட ரூ.479 திட்டம் ரூ.579ஆகவும், 56 நாட்கள் வேலிடிட்டி/2ஜிபி தினசரி டேட்டா கொண்ட ரூ.549 திட்டம் ரூ.649ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், 84 நாட்கள் வேலிடிட்டி/1.5ஜிபி தினசரி டேட்டா கொண்ட ரூ.719 மதிப்பிலான திட்டம் ரூ.859ஆகவும், 84 நாட்கள் வேலிடிட்டி/2ஜிபி தினசரி டேட்டா கொண்ட ரூ.839 திட்டம் ரூ.979ஆகவும், 365 நாட்கள் வேலிடிட்டி/24ஜிபி டேட்டா கொண்ட ரூ.1,799 திட்டம் ரூ.1,999ஆகவும், 365 நாட்கள் வேலிடிட்டி/2ஜிபி தினசரி டேட்டா கொண்ட ரூ.2,999 திட்டம் ரூ.3,599ஆகவும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








