Home
News

ஜூலை 3 முதல் அமல்.. ரூ.34 - ரூ.200 வரை விலை உயர்வு.. இனி எந்தெந்த Airtel திட்டங்கள் என்ன விலைக்கு கிடைக்கும்?

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது ரீச்சர் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்திய மறுநாளே சுனில் பார்தி மிட்டல் (Sunil Mittal) தலைமையிலான, நாட்டின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆப்ரேட்டரான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனமும் தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது திட்டங்களை 10 - 21 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு எப்போது முதல் அமலுக்கு வரும்? என்னென்ன ஏர்டெல் திட்டங்கள், இனி என்ன விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்?

ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு எப்போது முதல் அமலுக்கு வரும்? இதுகுறித்து ஏர்டெல் வெளியிட்டுள்ள ஒழுங்குமுறை தாக்கலின்படி (Regulatory filing), ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள 10% முதல் 21% வரையிலான டேரிஃப் ஹைக் (Airtel Up to 21%Tariff Hike) ஆனது 2024 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

Airtel விலை உயர்வு.. இனி எந்தெந்த திட்டங்கள் என்ன விலைக்கு கிடைக்கும்?

ஏர்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி இது மொடஸ்ட் ப்ரைஸ் ஹைக் (Modest Price Hike) ஆகும். அதாவது மிகவும் குறைந்த அளவிலான விலைகுறைப்பாகும். நுழைவு நிலை திட்டங்களில் (Entry-level Plans) ஒரு நாளைக்கு 70 பைசாவிற்கும் குறைவான விலை உயர்வை மட்டுமே அறிவித்துள்ளதாக ஏர்டெல் கூறுகிறது.

என்னென்ன திட்டங்கள் இனி என்ன விலைக்கு கிடைக்கும்? ஏர்டெல்லின் அன்லிமிடெட் வாய்ஸ் திட்டங்களில் (Airtel Unlimited Voice Plans), ரூ.265-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டத்தின் விலை ரூ.299 ஆகவும், ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.349 ஆகவும், ரூ.359-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.409 ஆகவும், ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.449 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல ஏர்டெல்லின் டெய்லி டேட்டா திட்டங்களில் (Airtel Daily Data Plans), ரூ.265 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டத்தின் விலை ரூ.299 ஆகவும், ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.349 ஆகவும், ரூ.359 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.409 ஆகவும், ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.449 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் ரூ.479-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டத்தின் விலை ரூ.579 ஆகவும், ரூ.549-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.649 ஆகவும், ரூ.719-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.859 ஆகவும், ரூ.839-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.979 ஆகவும், ரூ.2999-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.3599 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஏர்டெல்லின் டேட்டா ஆட்-ஆன் திட்டங்களை (Airtel Data Add-ons) பொறுத்தவரை, ரூ.19 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டத்தின் விலை ரூ.22 ஆகவும், ரூ.29 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.33 ஆகவும், ரூ.65 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் திட்டங்களை (Airtel Postpaid Plans) பொறுத்தவரை, ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டத்தின் விலை ரூ.449 ஆகவும், ரூ.499 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.549 ஆகவும், ரூ.599 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.699 ஆகவும், ரூ.999 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.1199 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, ஏர்டெல்லின் இந்த விலை உயர்வு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு பிரிவுகளில் உள்ள அனைத்து மொபைல் திட்டங்களுக்கான கட்டணமும் 12 - 25% உயர்த்துவதாக அறிவிக்கப்பட்ட மறுநாளே வந்துள்ளது. இதுதவிர்த்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வரம்பற்ற இலவச 5ஜி சேவைகளுக்கான அணுகலையும் ஜியோ நிறுவனம் கட்டுப்படுத்தியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Mobile Recharge Tariff Hike From July 3 List of Revised Price Details of Prepaid Postpaid
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X