Airtel மலிவான விலையில் 28 நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டங்கள்!
பாரதி ஏர்டெல் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தைக் கடந்த அக்டோபர் 2018 இல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏர்டெல் ஒவ்வொரு சந்தாதாரருக்கும் சேவை செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பு பெற ப்ரீபெய்ட் பேக்கை ரீசார்ஜ் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிக தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்து செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க முடியாத பயனர்களுக்காக ஏர்டெல் அறிமுகப்படுத்திய சேவை தான் இந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம்.

ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சரியான காலத்தில், தங்களின் சேவை செல்லுபடியாக்கும் காலத்தைத் தக்க நேரத்தில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சந்தாதாரர்களின் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகள் துண்டிக்கப்படும். அதேபோல், அவர்களின் ப்ரீபெய்ட் சிம் கார்டில் வேறு எந்த செயலையும் செய்ய நிறுவனம் அனுமதிக்காது. இந்த சேவைகள் எதுவும் துண்டிக்கப்படாமல் இருக்கச் சரியான நேரத்தில் செல்லுபடியாகும் காலத்தை ரீசார்ஜ் மூலம் நீடிக்க வேண்டும்.

குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்கள்
இதற்காக ஏர்டெல் டெல்கோ நிறுவனம், 'குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்கள் ' அல்லது ' ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டங்கள்' என்ற மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தாதாரர்கள் தங்கள் சிம் கார்டைத் துண்டிப்பதைத் தவிர்க்க இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டங்கள் உதவுகின்றன. குறிப்பாக ஏர்டெல்லிலிருந்து கிடைக்கும் குறைந்தபட்சம் வரம்பற்ற காம்போ திட்டமான ரூ.149 செலவிடத் தயாராக இல்லாத பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மூன்று குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள்
டிசம்பர் 2019 இல் கட்டண திருத்தம் செய்யப்பட்டதிலிருந்து, பாரதி ஏர்டெல் நிறுவனம் மூன்று குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே தன் வசம் கொண்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்காக ரூ.45, ரூ.49 மற்றும் ரூ.79 ஆகிய மூன்று திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறது. இதில் ரூ.45 க்கு கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம் தான் மிகவும் மலிவான திட்டமாகும். இந்த பேக்கின் கீழ் பயனர்களுக்கு டாக் டைம் அல்லது டேட்டா நன்மை இல்லாது, வெறும் வேலிடிட்டி நன்மை மட்டுமே வழங்கப்படுகிறது.

ரூ.45 ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மை
டாக் டைம் மற்றும் டேட்டா நன்மை இல்லாத இந்த திட்டத்தில் அதற்கு பதிலாக, ரூ.45 ரீசார்ஜ் செய்யும் பயனருக்கு 28 நாட்கள் சேவை செல்லுபடியாகும் வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது. மேலும், அனைத்து வாய்ஸ் கால் அழைப்புகளும் வினாடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். மெசேஜ்களை பொறுத்தவரை உள்ளூர் எஸ்.எம்.எஸ்-க்கு ரூ.1 மற்றும் STD எஸ்.எம்.எஸ்க்கு ரூ.1.5 என்று வசூலிக்கப்படும்.

ரூ.49 மற்றும் ரூ.79 ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மை
அதேபோல், ரூ.49 ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டமானது ரூ.38.52 மதிப்பிலான டாக் டைம் நேரத்துடன், 100 எம்பி டேட்டா நன்மை மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையையும் வழங்குகிறது. இறுதியாக, ரூ.79 ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டம் பயனருக்கு ரூ.64 மதிப்பிலான டாக் டைம் நேரத்துடன், 200 எம்.பி 2 ஜி / 3 ஜி / 4 ஜி தரவு மற்றும் 28 நாட்கள் சேவை செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் கிடைக்கிறது.

நிமிடத்திற்கு 60 பைசா
ரூ 49 ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டம் மற்றும் ரூ.79 ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கான குரல் அழைப்புகள், நிமிடத்திற்கு 60 பைசா என்ற கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும். பாரதி ஏர்டெல் பயனர்கள் தங்கள் சேவை செல்லுபடியைக் கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இன்கமிங் மற்றும் அவுட்கோயிங்
இல்லையெனில், அவர்களின் ப்ரீபெய்ட் எண்ணிற்கு உள்வரும் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகள் தடை செய்யப்படும். எந்த சிக்கலும் இல்லாமல் ப்ரீபெய்ட் எண்களைப் பயன்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்துங்கள்.

ஏழு நாட்களுக்குப் பிறகு சேவை நிறுத்தப்படும்
ஏதேனும் ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்கள், தங்களின் தற்போதைய திட்டத்தின் வேலிடிட்டி நிறைவுபெற்ற பிறகு ரீசார்ஜ் செய்யத் தவறினால், பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது, மேலும் உளவரும் இன்கமிங் அழைப்புகளும் அனைத்தும் ஏழு நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்படும்.

மே 3ம் தேதி வரை இலவச வேலிடிட்டி
மே 3 வரை, இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த காலத்தில் ரீசார்ஜ் பெற முடியாத குறைந்த வருமானம் கொண்ட பயனர்களைக் கருத்தில் கொண்டு ப்ரீபெய்ட் வேலிடிட்டியை மே 3ம் தேதி வரை இலவசமாக பாரதி ஏர்டெல் நீட்டித்துள்ளது.


Click it and Unblock the Notifications