அன்லிமிடெட் 5G டேட்டாவிற்கு ஆப்பு.. ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு.. Airtel எம்டி கோபால் விட்டல் போட்ட 2 குண்டு!
ஏர்டெல் (Airtel) சேவையின் கீழ் இலவசமாக கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை (Unlimited 5G Data Offer), 5ஜி திட்டங்களின் விலை மற்றும் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு குறித்து, ஏர்டெல் நிறுவனத்தின் எம்டி கோபால் விட்டல் (Gopal Vittal) பேசியுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, 5ஜி சேவையானது இன்று இந்தியாவில் இலவச டேட்டாவாக மாறிவிட்டது. எனவே, நுகர்வோர் தரப்பில் இருந்து பணமாக்குதல் (Monetization) என்கிற விஷயமே இல்லாமல் போய்விட்டது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையானது, 5ஜி என்கிற அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை பணமாக்குவதற்கு எதிராக, தலைகீழாக செயல்படுகிறது என்று கோபால் விட்டல் கூறியுள்ளார்.

இலவச 5ஜி-க்கு எதிரான கோபால் விட்டலின் இந்த பேச்சு, ஏர்டெல் வழங்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையானது கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்பதை சொல்லாமல் சொல்கிறது என்றே கூறலாம். இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், ஏர்டெல்லின் போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவும் (Reliance Jio) கூட இதே போன்ற எண்ணத்தையே கொண்டுள்ளது.
டேட்டா பயன்பாடு (Data Usage) மற்றும் வாடிக்கையாளர் சேர்க்கைகள் (Customer additions) அதிகரித்த போதிலும் கூட, ரிலையன்ஸ் ஜியோவின் 90 மில்லியனுக்கும் அதிகமான 5ஜி சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் அன்லிமிடெட் டேட்டாவானது, நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியை பாதித்துள்ளது" என்று முகேஷ் அம்பானி கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. 2ஜி சேவையில் இருந்து 4ஜி-க்கு இடம்பெயர்தல் (2G to 4G migration of customers) , போஸ்ட்-பெய்டு டேட்டாவை பணமாக்குவது (Post-paid data monetisation), சர்வதேச ரோமிங் (International roaming) மற்றும் அதிக விலை திட்டங்களுக்கு மாறிய சந்தாதாரர்கள் போன்ற விஷயங்களின் அடிப்படையில், ஏர்டெல் நிறுவனம் நல்ல லாபத்தை கண்டுள்ளது. மூன்றாம் காலாண்டில், ஒரு பயனருக்கான சராசரி வருவாய் ரூ.208 ஆக அதிகரித்துள்ளது.
"ஆனால் இது ஒரு சாதாரண முன்னேற்றமாகவே இருக்கும். டேரிஃப் ரிப்பேர் (கட்டணங்களை சரிசெய்தல்) இருந்தால் மட்டுமே உண்மையான முன்னேற்றம் வரும். அது நடக்குமா என்பது கேள்வி அல்ல, ஆனால் அது எப்போது நடக்கும் என்பதுதான் கேள்வி" என்றும் கோபால் விட்டல் கூறியுள்ளார்.

கோபால் விட்டலை பொறுத்தவரை, 5ஜி சேவைக்கான வித்தியாசமான விலையை விவேகமான நடவடிக்கையாக இருக்காது. ஏனென்றால் ஏர்டெல் வாடிக்கையாளர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே அதிக விலையுள்ள திட்டங்களுக்கு மாறுவார்கள் என்று அவர் நம்புகிறார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 5ஜி திட்டங்களுக்கான புதிய விலைகளை அறிவித்தால் அல்லது ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தால்.. ஏர்டெல் நிறுவனமும் அதை பின்பற்ற வேண்டியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் யார் முதலில் விலை உயர்வை அறிவிப்பார்கள் என்று மற்ற நிறுவனங்கள் "பல்லை கடித்துக்கொண்டு" காத்திருக்கும்!


Click it and Unblock the Notifications








