Home
News

Airtel சேவையில் வரப்போகும் முக்கிய மாற்றம்.. 90 நாள், 336 நாள் Plan-ஆ பார்த்து இப்போவே ரீசார்ஜ் பண்ணிக்கோங்க!

நீங்களொரு ஏர்டெல் (Airtel) கஸ்டமராக இருந்தால்.. வரும் நாட்களில் அதிக பணம் செலவழித்து ரீசார்ஜ் செய்ய விரும்பவில்லை என்றால்.. 3 மாதங்கள் அல்லது 1 வருடத்திற்கு என லாங் வேலிடிட்டியை (Long Validity) வழங்கும் ஒரு நல்ல திட்டமாக பார்த்து இப்போதே ரீசார்ஜ் செய்து கொள்ளவும். ஏனென்றால் ஏர்டெல் நிறுவனமானது அதன் சேவையில் 2 முக்கிய மாற்றங்களில் ஒன்றை நிச்சயமாக செய்யப்போகிறது.

ஒன்று - ஏர்டெல் நிறுவனமானது, தனக்கு வரும் வருமானத்தை அதிகரிக்க அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை மீண்டும் உயர்த்தும். இரண்டாவது - ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தாமலேயே தனது வருமானத்தை அதிகரிக்க 4 வகையான உத்திகளை வாடிக்கையாளர்கள் மீது கட்டவிழ்த்து விடும்.

Airtel: 90 நாள் Plan-ஆ பார்த்து இப்போவே ரீசார்ஜ் பண்ணிக்கோங்க!

ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வை பொறுத்தவரை, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆன கோபால் விட்டல் (Gopal Vittal), இந்த 2025 பிப்ரவரி மாதத்தில் மட்டுமே இரண்டாவது முறையாக ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வை அழுத்தமாக பற்றி பேசி உள்ளார்.

ஒருவேளை விலை உயர்வு சாத்தியமாகாத பட்சத்தில் ஏஆர்பியு (ARPU) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை நிலையாக அதிகரிக்க உதவும் 4 உத்திகளை ஏர்டெல் பின்பற்ற உள்ளது டெலிகாம் வல்லுநர்கள் இதை ஆர்கானிக் ஏஆர்பியு க்ரோத் ட்ரைவர்கள் (Organic ARPU growth drivers) என்கின்றனர். அதாவது கட்டண திருத்தங்கள் இல்லாவிட்டாலும் ஏஆர்பியு-வை அதன் போக்கிலேயே வளரவிடுவது.

முதல் உத்தி - ஃபீச்சர் ஃபோன் டூ ஸ்மார்ட்போன் அப்கிரேட்ஸ்: அதாவது ஃபீச்சர் போன் பயனர்களை 4ஜி / 5ஜி நெட்வொர்க்குகள் அல்லது ஸ்மார்ட்போன்களுக்கு மாற்ற அல்லது அப்கிரேட் ஆக ஊக்குவிப்பது ஏர்டெல்லின் 4ஜி மற்றும் 5ஜி வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்த வேண்டும்.

இரண்டாவது உத்தி - ப்ரீபெய்டு டூ போஸ்ட்பெய்டு மைக்ரேஷன்: அதாவது ஏர்டெல் ப்ரீபெய்டு பயனர்களை போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்நிறுவனம் 80 மில்லியன் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் கொண்ட தளத்தை உருவாக்க வேண்டும் என்கிற லட்சத்தியத்தை கொண்டுள்ளது.

மூன்றாவது உத்தி - டேட்டா மானிடைசேஷன்: அதாவது டேட்டா நன்மையை பணமாக்குதலாக்க வேண்டும். இதன்கீழ் இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மை நிறுத்தப்படலாம் அல்லது புதிய 5ஜி டேட்டா திட்டங்கள் அறிமுகம் செய்யப்படலாம் அல்லது ஏர்டெல் பயனர்களின் தங்கள் டேட்டா பயன்பாட்டை அதிகரிக்க செய்யும் வேலைகளை (இலவச ஓடிடி நன்மைகள்) ஏர்டெல் செய்யலாம்.

நான்காவது உத்தி - சர்வதேச ரோமிங்: ஏர்டெல் நிறுவனம் சர்வதேச ரோமிங் பேக்குகளின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. தனது வருவாயை மேம்படுத்த உலகளாவிய பயணத்தின் அதிகரிப்பை பயன்படுத்தி கொள்ள விரும்புகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த முயற்சிகள், சாத்தியமான கட்டண திருத்தங்களுடன் இணைந்து அல்லது கட்டண திருத்தங்கள் இல்லாமல் ஏஆர்பியு வளர்ச்சியை தக்கவைக்க உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்

கடைசியாக ஏர்டெல் நிறுவனமானது ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 10 - 21 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்து இருந்தது. அதனை தெடர்ந்து 2025 பிப்ரவரி முதல் வாரத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் எம்டி ஆன கோபால் மிட்டல் அடுத்த விலை உயர்வை குறித்து திட்டவட்டமாக பேசி இருந்தார்.

தொழில் நிதி ரீதியாக ஸ்திரமாக இருப்பதற்கும், நிலையான அடிப்படையில் நியாயமான வருமானத்தை வழங்குவதற்கும் இன்னும் சிறிது கட்டண திருத்தும் தேவைப்படுகிறது என்றும் கோபால் விட்டல் கூறி இருந்தார். அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டங்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்து இருந்தார். தற்போது மீண்டும் அதையே செய்துள்ளார். ஆக ஏர்டெல் கஸ்டமர்கள் கொஞ்சம் உஷாராக இருக்கவும்.

Best Mobiles in India

English summary
Airtel MD About Tariff Repair and 4 Strategies For Organic ARPU Growth Without Price Hike
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X