ஏர்டெல் பயனர்களே தயாரா?- மீண்டும் ப்ரீபெய்ட் திட்டங்கள் விலை உயரும்: உறுதி செய்த சிஇஓ!

|

ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை மீண்டும் உயர்த்தக் கூடும் என ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முறை ஒரு பயனரின் சராசரி வருவாய் (ARPU) ரூ.200 ஆக அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரிக்கத் தயாராக இருக்கிறது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தினார்.

ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரிக்க திட்டம்

ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரிக்க திட்டம்

கடந்த ஆண்டு வோடபோன் ஐடியா (விஐ), ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தி அறிவித்திருக்கிறது. தற்போது சந்தாதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுக்கும் தகவலாக ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரிக்க தயாராக இருக்கிறது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தினர். 2022-ல் ஏர்டெல் மீண்டும் உயர்த்த வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த முறையானது பயனருக்கு சராசரி வருவாய் (ஏஆர்பியூ) ரூ.200 ஆக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

டெலிகாம் ரெகுலேட்டரின் அடிப்படை விலை

டெலிகாம் ரெகுலேட்டரின் அடிப்படை விலை

எகானாமிக்ஸ் டைமஸ் அறிக்கையின்படி, 5ஜி-க்கான டெலிகாம் ரெகுலேட்டரின் அடிப்படை விலையில் ஏர்டெல் நிறுவனம் மகிழ்ச்சியாக இல்லை. "தொழில்துறைக்கான நிர்ணய விலையில் குறைப்பு இருந்தது இருந்த போதிலும் அது போதுமானதாக இல்லை எனவே அந்த வகையில் இது ஏமாற்றம் அளிக்கிறது" என வருவாய் அழைப்பில் விட்டல் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு மூன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் திட்ட விலைகளை கிட்டத்தட்ட 18 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தனர்.

விலைகளில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடையவில்லை

விலைகளில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடையவில்லை

5ஜி ரிவர்ஸ் விலைகளில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடையவில்லை என டிராய் பரிந்துரைத்தது. மேலும் 5ஜி ரிசர்வ் விலையை 90 சதவீதம் குறைக்க வேண்டும் என நிறுவனங்கள் வலியுறுத்தின. இதுகுறித்து விட்டல் கூறுகையில், "எனது சொந்த எண்ணம் என்னவென்றால், இந்த வருடத்தில் சில கட்டண உயர்வை நாம் காணத் தொடங்க வேண்டும். முதல் போர்ட் 200-ஐ தொட வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் புதிய விலை உயர்வு ஒரு தற்காலிகம் மட்டுமே, விலை உயர்வு இருந்தபோதிலும், ஏர்டெல் அதிக 4ஜி பயனர்களை ஈர்த்தது.

விலை உயர்த்திய முதல் நிறுவனம் ஏர்டெல்

விலை உயர்த்திய முதல் நிறுவனம் ஏர்டெல்

நவம்பர் 2021-ல் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 18 முதல் 25 சதவீதம் வரை உயர்த்திய முதல் நிறுவனமாக ஏர்டெல் இருந்தது. தொடர்ந்து வோடபோன் ஐடியாவும் அதே அளவு விலை வரம்பை உயர்த்தி அறிவித்தது. அதேசமயம் ரிலையன்ஸ் ஜியோ 20% வரை கட்டண உயர்வை அறிவித்தது. ஏர்டெல் நிறுவனம் தற்போது விலை உயர்வு அறிவிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் விஐ, ஜியோ தங்களது திட்டங்களை உயர்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏர்டெல் பிளாக் திட்டம்

ஏர்டெல் பிளாக் திட்டம்

ஏர்டெல் பிளாக் திட்டம் என்பது வாடிக்கையாளர்களுக்கு ஒரு திட்டத்தின் கீழ் தங்கள் சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிளான் ஆகும். ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் பிளாக் திட்டங்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த திட்டமானது ரூ.998, ரூ.1349, ரூ.1598 மற்றும் ரூ.2099 என்ற நான்கு விலைகளில் இருந்தது. இந்த ஏர்டெல் பிளாக் திட்டமானது போஸ்ட்பெய்ட் இணைப்புடன் வருகிறது. தற்போது ஏர்டெல் ரூ.1099 என்ற விலையில் புதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

வரம்பற்ற ஃபைபர் இணையம்

வரம்பற்ற ஃபைபர் இணையம்

ரூ.1099 விலையில் கிடைக்கும் புதிய ஏர்டெல் பிளாக் திட்டமானது 200 எம்பிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற ஃபைபர் இணையம் மற்றும் ஏர்டெல் லேண்ட்லைன் இணைப்புகளை வழங்குகிறது. கூடுதலாக இந்த திட்டம் டிவி சேனல்களுக்கு என டிடிஎச் இணைப்பையும் வழங்குகிறது. தனிப்பட்ட முறையில் இந்த டிடிஎச் இணைப்பு பெற்றால் இதற்கு மட்டும் ரூ.350 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.1099 ஏர்டெல் பிளாக் திட்டமானது அமேசான் பிரைமுக்கான ஒரு வருட சந்தாவையும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப்ஸ்-க்கான ஒரு வருட சந்தாவையும் வழங்குகிறது.

இணைப்புகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும்

இணைப்புகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும்

ஏர்டெல் பிளாக் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் போஸ்ட்பெய்ட் சிம் கார்ட்கள் உடன் வருகிறது. ஆனால் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ரூ.1099 திட்டத்தில் சிம்கார்ட் கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியிவில்லை. இதுகுறித்து டெலிகாம் டாக் தளத்தில் வெளியான தகவலின்படி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.1099 திட்டமானது ப்ரீபெய்ட் இணைப்புடன் வருகிறது. இந்த புதிய ஏர்டெல் பிளாக் திட்டத்தின் மூலம், கடந்த காலங்களில் மற்ற திட்டங்களை பயன்படுத்தியவர்கள் இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்தின் மூலம் தங்கள் ஏர்டெல் இணைப்புகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கிறது.

Source: indiatoday.in

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel May Hike Prepaid Plans Price Again: Confirmed by CEO Gopal Vittal

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X