அப்படி போடு.. 84 நாட்கள் வேலிடிட்டி.. தினசரி 2.5ஜிபி டேட்டா.. மலிவு விலையில் மாஸ் காட்டும் ஏர்டெல்..
ஜியோ நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கம்மி விலையில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்கி உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வரும். அதாவது ஏர்டெல் நிறுவனம் கம்மி விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், rewardsmini subscription, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் சந்தா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்.
மேலும் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் ரசிகர்களுக்கான பெஸ்ட் டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்தது. இப்போது அந்த பேக்குகளை பார்க்கலாம்.ஏர்டெல் ரூ.49 டேட்டா பேக் ஆனது 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 1 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த திட்டம் 1ஜிபி டேட்டாவை ரூ.8 என்ற விலையில் வழங்குகிறது. நீங்கள் பயணம் செய்தால் அல்லது ஒரு நாள் வைஃபை இல்லாத பகுதியில் இருந்தால் இந்த டேட்டா பேக் பயனுள்ளதாக இருக்கும்.

ஏர்டெல் ரூ.99 டேட்டா பேக் ஒரு நாளைக்கு 20ஜிபி டேட்டாவை FUP வரம்புடன் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 2 நாட்களாகும். இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 2 நாட்களுக்கு 40ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வேகம் 64 கேபிபிஎஸ் வரை இருக்கும். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
ஏர்டெல் ரூ.181 டேட்டா பேக் ஆனது 30 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏர்டெல் ரூ.301 டேட்டா பேக் ஆனது உங்களுடைய அடிப்படைத் திட்டத்தின் செல்லுபடி காலம் வரை இருக்கும். மேலும் இந்த ஏர்டெல் ரூ.301 திட்டம் 50ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த பேக் Wynk Music Premium சந்தாவுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








