ஏர்டெல்லுக்கு சங்கு ஊதிய ஜியோ- 49 மில்லியன் வாடிக்கையாளர் இழப்பு.!

தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றது. முதலிடத்தில் இருந்த ஏர்டெல் இப்போது, 3ம் இடத்திற்கு தள்ளப்படும் நிலைக்குவந்துள்ளது. இந்த ஆண்டு 3 காலாண்டில் 49 மில்லியன் வாடிக்கையாளர்கள

|

ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் நுழைந்தவுடன் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஆட்டம் கண்டுள்ளன. மேலும், பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்கி வருவதால், ஜியோ நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

ஏர்டெல்லுக்கு சங்கு ஊதிய ஜியோ- 49 மில்லியன் வாடிக்கையாளர் இழப்பு.!

தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றது. முதலிடத்தில் இருந்த ஏர்டெல் இப்போது, 3ம் இடத்திற்கு தள்ளப்படும் நிலைக்குவந்துள்ளது.

இந்த ஆண்டு 3 காலாண்டில் 49 மில்லியன் வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனம் இழந்துள்ளது குறிப்பிடதக்கது

ஜியோ வருகை:

ஜியோ வருகை:

இந்திய தொலை பேசி சந்தையில் ஜியோ நிறுவனம் நுழைந்தது. தனது அதிரடியான இலவச திட்டத்தால், குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றது. மேலும், ஜியோ நிறுவனம் ஏராளமான இலவச சலுகைகளை வழங்கியதால், ஏர்செல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டம் அடைந்ததால், தொழிலுக்கு மூடு விழா நடத்தி விட்டன.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

இந்திய தொலைபேசி சந்தையில் ஜியோ நிறுவனம் தினமும் 100 எஸ்எம்எஸ், ரோமிங் ப்ரீ, காலர் டியூன், 2 ஜிபி டேட்டா 4 ஜி வோட்டு வழங்குகின்றது. பல்வேறு அதிரடி ஆப்பர்களையும் ஜியோ நிறுவனம் வழங்கி வருவதால், ஏர்செல், ரிலையன்ஸ் நிறுவனங்கள் மூடு விழா கண்டன. தற்போது, வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியுள்ளன.

தொலைபேசி சந்தையில் நஷ்டம்:

தொலைபேசி சந்தையில் நஷ்டம்:

ஜியோ நிறுவனம் புகுந்ததால் தொலைபேசி சந்தையில், சில நிறுவனங்கள் தொழிக்கு பூட்டு போட்டு விட்டனர். ஏர்டெல், ஐடியா, போடாபோன், பிஎஸ்என்எல், டோகோமோ உள்ளிட்ட நிறுவனங்களில் சிம்கார்டுகளை இரண்டாம் நிலையாக பயன்படுத்த துவங்கி விட்டனர். ஜியோ சிம் கார்ட்டை அவுட் கோயிங்க்கும், இன் கம்மிங் கால்களுக்கு இந்த நிறுவனங்களை பயன்படுத்த துவங்கி விட்டனர். இதனால் தொழில் போதிய வருமானம் இன்றி நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 ரயில் டெல்லுக்கு ஆப்பு:

ரயில் டெல்லுக்கு ஆப்பு:

ரயில்வேயில் கடந்த 6 ஆண்டாக ஏர்டெல் நிறுவனம் சேவை வழங்கி வந்தது. தற்போது, இந்த சேவை கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்தது. இதனால் ரயில்வேயில் அனைத்து அழைப்புகளுக்கு ஜியோ இலவசமாக கொடுத்து, 1.95 லட்சம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுந்துள்ளது.

ஆண்டுக்கு ரூ.100 கோடி பறிபோனது:

ஆண்டுக்கு ரூ.100 கோடி பறிபோனது:

ரயில்வே துறையில் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம் கிடைத்து வந்தது. தற்போது இது ஜியோவுக்கு செல்கின்றது. இதனால் ஏர்டெல் நிறுவனத்துக்கு இனி கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.100 கோடியும் பறிபோகின்றது. மேலும் ஜியோ நிறுவனம் தனது ரயில்வே அதிகாரிகளுக்கும் பல்வேறு சேவை சலுகைகளையும் அறிவித்துள்ளது.

ரயில்வேயில் மட்டும் 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள்:

ரயில்வேயில் மட்டும் 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள்:

ரயில்வேயில் 1.95 லட்சம் சேவை அளித்தாலும், ஏர்டெல்லை பயன்படுத்தி வந்த ரயில்வே ஊழியர்கள் என மொத்தம் சேர்த்து தற்போது, 3.78 லட்சம் ஊழியர்களை தங்கள் பக்கம் சேர்த்துள்ளது ஜியோ.

 49 மில்லியன் வாடிக்கையாளர்கள் இழப்பு:

49 மில்லியன் வாடிக்கையாளர்கள் இழப்பு:

இந்நிலையில் இந்த கடந்த 3ம் காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் இந்தியா மற்றும் சவுத் ஆசியாவில் மட்டும் 49 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஜியோ வருகையால், ஏர்டெல் நிறுவனத்துக்கு 86 ஆயிரம் கோடியாக இந்த காலாண்டில் வருமானம் குறைந்துள்ளது.

4ஜியில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு:

4ஜியில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு:

ஏர்டெல் நிறுவனத்துக்கு 4ஜி சேவையால், 112 சதவீதம் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளது. இது 77.1 மில்லியான இருக்கின்றது. கடந்தாண்டு 36.4 மில்லியானாக இருந்தது குறிபிடதக்கது. ஆப்பிரிக்கா வருமானத்தில் 11.2 சதவீதம் எடுத்துள்ளது.

இந்திய சந்தையில் மரண அடி:

இந்திய சந்தையில் மரண அடி:

ஏர்டெல் நிறுவனத்துக்கு இந்திய சந்தையில், பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. ஜியோ மேலும் பல்வேறு அதிரடியாக திட்டங்களையும் அறிவித்து வருகின்றது. இதனால் மற்ற நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. இந்திய சந்தையில் ஏர்டெல், வோடாபோன், ஐடியா, டோகோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மரண அடியாக அமைந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel loses 49 million customers in Q3 Report : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X