Home
News

வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் வழங்கும் பயனுள்ள திட்டங்கள்.! 1,2,3,4.!

ஜியோ நிறுவனம் அன்மையில் ப்ரீபெய்ட் திட்டங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டுவந்துவிட்டது, இதற்கு மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் வரத்தொடங்கிவிட்டன. குறிப்பாக ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது. ஆனால் ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக இரண்டு
நிறுவனங்களும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.

பெரிய அளவிலான இடைவெளி

பெரிய அளவிலான இடைவெளி

அன்மையில் அறிவிக்கப்ட்ட கட்டண உயர்வுக்கு பிறகு,அனைத்து தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களும் தங்கள் திட்டங்களின் விலையை சுமார் 40சதவிகிதம் வரை அதிகரித்துள்ளனர். பின்பு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் அதையேதான் செய்துள்ளது. ஆனால் ஜியோ நிறுவனத்தின் திட்டங்களுக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்களுக்கும் நன்மைகளை பொறுத்தவரை பெரிய அளவிலான இடைவெளியை காண முடிகிறது.

4திட்டங்கள்

4திட்டங்கள்

ஏர்டெல் நிறுவனம் இப்போது தனது ட்ரூலி அன்லிமிடெட் தொகுப்பின் கீழ் மொத்தமாக 12திட்டங்களை கொண்டுள்ளது, அதில் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆன 84நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ்ரூ.588-முதல் என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் மொத்தமாக 4திட்டங்கள் உள்ளன, அந்த திட்டங்களின் நன்மைகள்மற்றும் முழுவிவரங்களை இப்போது பார்ப்போம்.

1-ரூ.588-ப்ரீபெய்ட் திட்டம்

1-ரூ.588-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.588-ப்ரீபெய்ட் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். இதுதவிர ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் வசதி, ஃபாஸ்டேக், விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா மற்றும் ஷா அகாடமியில் 4 வாரங்கள் இலவச கோர்ஸ் போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

குறிப்பாக ரூ.588-ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் நம்பி இந்த திட்டத்தைதேர்வு செய்யலாம்.

2-ரூ.698-ப்ரீபெய்ட் திட்டம்

2-ரூ.698-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.698-ப்ரீபெய்ட் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி அளவிலான டேட்டாவைவழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். இதுதவிர ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் வசதி,ஃபாஸ்டேக், விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா மற்றும் ஷா அகாடமியில் 4 வாரங்கள் இலவச கோர்ஸ்
போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

இந்த ரூ.698-ப்ரீபெய்ட் திட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு இலவச் வரம்பற்ற அழைப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3-ரூ.1,498-ப்ரீபெய்ட் திட்டம்

3-ரூ.1,498-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1,498-ப்ரீபெய்ட் திட்;டம் ஆனது தினசரி டேட்டாவை வழங்காமல், எந்த டேட்டா வரம்பும் இல்லாத 24ஜிபி என்கிற மொத்த டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், அதாவது இதை மாதத்திற்கு 2ஜிபி என்று கூட பயன்படுத்தலாம்.

இதுதவிர ரூ.1,498-ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், மொத்தம் 3600 எஸ்எம்எஸ்கள், விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், ஃபாஸ்டேக் கேஷ்பேக் மற்றும் ஷா அகாடமி கோர்ஸ் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளத. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365நாட்கள் ஆகும்.

4-ரூ.2,398ப்ரீபெய்ட் திட்டம்

4-ரூ.2,398ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் டாப் திட்டமான இந்த ரூ.2,398ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ்,ஃபாஸ்டேக் கேஷ்பேக், விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா மற்றும் ஷா அகாடமியில் 4 வாரங்கள் இலவச கோர்ஸ் போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. மேலும் ரூ.2,398ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Airtel Long Term Prepaid Plans Benefits, Data, Validity Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X