ஏர்டெல், ஜியோ வழங்கும் ரூ.97 மற்றும் ரூ.98 திட்டங்களில் வழங்கும் சிறப்பு சலுகைகள் என்னென்ன?
ஏர்டெல் வழங்கும் ரூ.35 திட்டத்தில் அறிவித்த சலுகை என்னவென்றால் ரூ.26.66 டாக்டைம், உள்ளூர்,வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா, 100எம்பி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிற
ஏர்டெல்,ஜியோ நிறுவனங்கள் தொடர்ந்து மலிவு விலையில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் ரூ.97 திட்டத்தில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த திட்டம்
பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

அதேபோன்று ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.98 திட்டத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த இரண்டு நிறுவனங்களும் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

ஏர்டெல்:
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.97 திட்டத்தில் 1.5ஜிபி டேட்ட, 200எஸ்எம்எஸ், 350 நிமிட வாய்ஸ் கால் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 28 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ:
ஜியோ வழங்கும் ரூ.98 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா, 300எஸ்எம்எஸ் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை 28 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் வழங்கும் ரூ.35 திட்டம்:
ஏர்டெல் வழங்கும் ரூ.35 திட்டத்தில் அறிவித்த சலுகை என்னவென்றால் ரூ.26.66 டாக்டைம், உள்ளூர்,வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா, 100எம்பி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது

குறைந்த விலை திட்டங்கள்:
மேலும் ரூ.65 திட்டத்தில் ஏர்டெல் அறிவித்து சலுகை என்னவென்றால் ரூ.65 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா, 200எம்பி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.95 திட்டத்தில் ஏர்டெல் அறிவித்து சலுகை என்னவென்றால் ரூ.95 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசா, 500எம்பி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த சலுகைகளை தமிழ்நாடு, பஞ்சாப், உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு பகுதிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது என்று ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications