Home
News

பணிந்தது ஏர்டெல்; ரூ.2/-க்கு 1ஜிபி; 82 நாட்கள் செல்லுபடி; அடேய் ஏர்டெல் ஆடிய ஆட்டம் என்ன.?

ப்ரீபெயிட் திட்டங்களின் டேட்டா நன்மை முடிந்த பின்னர் கிடைக்கும் வரம்பற்ற டேட்டாவின் வேகத்தை 128 Kbps என்று அதிகரித்தது.

By Muthuraj

தன் பயனர்கள் ஏர்டெல் சேவையில் இருந்து விலகிக்கொள்ளும் நிலை உருவானதை அடுத்து, பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெயிட் திட்டங்களுக்கான மிகப்பெரிய மாற்றம் ஒன்றை சமீபத்தில் ஏற்படுத்தி இருந்தது. அதாவது அதன் ப்ரீபெயிட் திட்டங்களின் டேட்டா நன்மை முடிந்த பின்னர் கிடைக்கும் வரம்பற்ற டேட்டாவின் வேகத்தை 128 Kbps என்று அதிகரித்தது.

"இது ஜியோவுடனான போட்டியை இன்னும் அதிகரிக்கும்" என்கிற பக்கத்தை தவிர்த்து, மறுபக்கத்தை பார்த்தால், இந்த நடவடிக்கையானது ஏர்டெல் நிறுவனத்திற்கு மிகவும் தேவையானதொரு மாற்றமாகவே இருந்தது. ஏனெனில் பல பயனர்கள் ஏர்டெல் சேவையை விட்டு வெளியேற்றுவதற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அந்த பீதியிலேயே தான் இந்த நடவடிக்கை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது மறைமுகமான உண்மை. இந்த அதிரடி மாற்றத்தை தொடர்ந்து, ஏர்டெல் அதன் 3ஜிபி/ நாள் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

நம்பமுடியாத நன்மை.!

நம்பமுடியாத நன்மை.!

மொத்தம் 82 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது தான் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் பிரதான நன்மையாகும். அந்த 82 நாட்களுக்கும், ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான அதிவேக டேட்டா என்கிற நம்பமுடியாத நன்மையை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ள ஏர்டெல், இதன் வழியாக மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டித்தன்மையை அதிகரித்துள்ளது என்பதும் வெளிப்படை.

மொத்தம் 246 ஜிபி.!

மொத்தம் 246 ஜிபி.!

ரூ.588/- என்கிற விலை நிர்ணயம் கொண்டுள்ள இந்த புதிய ஏர்டெல் திட்டமானது, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.499 மற்றும் வோடபோன் நிறுவனத்தின் ரூ.549/- ஆகியவற்றுடன் நேரடியாக போட்டியிடுகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.588/- ஆனது, நாள் ஒன்றுக்கு 3ஜிபி அளவிலான 4ஜி / 3ஜி டேட்டா என மொத்தம் 246 ஜிபியை வழங்குவதோடு, சேர்த்து இதர நன்மைகளையும் அளிக்கிறது.

வரம்பற்ற உள்வரும் ரோமிங் அழைப்புகள்.!

வரம்பற்ற உள்வரும் ரோமிங் அழைப்புகள்.!

அதாவது இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் + எஸ்டிடி), வரம்பற்ற உள்வரும் ரோமிங் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் அழைப்பு நன்மைகளுக்கு எந்த விதமான, நாள் மற்றும் வாராந்த வரம்பும் கிடையாது என்பதையும், இந்த திட்டத்தின் மூலம், ஏர்டெல் ஒரு ஜிபி அளவிலான டேட்டாவின் விலையை ரூ 2.26/-க்கு கொண்டு வந்துள்ளதால் என்பதும் குறிப்பிடத்ததக்கது.

ஜியோ மற்றும் வோடாபோன்.!

ஜியோ மற்றும் வோடாபோன்.!

மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.498/- ஆனது, மொத்தம் 182 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது நாலா ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான டேட்டா, குரல் அழைப்பு நன்மைகள் ஆகியவைகளை மொத்தம் 91 நாட்களுக்கு ஒரு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. வோடபோனின் ரூ.549/-ஐ பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது

ஏர்டெல் பயனர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது.!

ஏர்டெல் பயனர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது.!

முன்னதாக, வரம்பு முடிந்த கிடைக்கும் டேட்டா வேகத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள மாற்றத்தின் விளைவாக, ஏர்டெல் அதன் பல் பயனர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது. உதாரணமாக, ஏர்டெல் ரூ.199/- கட்டணத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. தினசரி வரம்பான 1.4 ஜிபி தீர்ந்த பின்னர், அடுத்த நாளுக்கான 1.4 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை பெற, நள்ளிரவு 12 மணி வரை காத்திருக்க வேண்டும். இதற்கிடையில் கிடைக்கும் டேட்டாவின் வேகம் தான் தற்போது 128 Kbps இஎன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம், ஏர்டெல் அதன் உண்மையான வரம்பற்ற டேட்டாவை வழங்குவதோடு சேர்த்து, பயனர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ஆரம்பித்து வைத்தது வேறு யாருமில்லை.!

ஆரம்பித்து வைத்தது வேறு யாருமில்லை.!

128 Kbps என்பது அதிவேக தரவு அல்ல, இருந்தாலும் கூட, அது வாட்ஸ்ஆப் மெசேஜ்களை அனுப்ப மற்றும் படிக்க போதுமானதாக இருக்கும். அதாவது ஆன்லைனில் இருப்பது மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்துவது என்பது ஒவ்வொரு நபரின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிடும். இந்த அன்லிமிடெட் பாணியை ஆரம்பித்து வைத்தது வேறு யாருமில்லை, ரிலையன்ஸ் ஜியோ தான். தினசரி டேட்டா நன்மையை அறிமுகம் செய்த கையோடு, வரம்பிற்கு பின்னரும் கூட டேட்டா நன்மைகள் கிடைக்கும், ஆனால் அதன் வேகத்தில் மாற்றங்கள் இருக்கும் என்றும் அறிவித்தது.

128 Kbps வேகத்தை அணுக தகுதியான திட்டங்கள் என்னென்ன.?

128 Kbps வேகத்தை அணுக தகுதியான திட்டங்கள் என்னென்ன.?

ஜியோ அதன் அறிமுகத்தின் போது, வரம்பிற்கு பின்னர் 128 Kbps வேகத்தை வழங்கியதும், தற்போது 64 Kbps என்கிற வேகத்தை வழங்குவதும், மறுகையில் உள்ள பிஎஸ்என்எல், 128 Kbps வழங்குவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின் வரம்பற்ற ப்ரீபெயிட் காம்போ ரீசார்ஜ்களான - ரூ.199, ரூ.249, ரூ.349, ரூ.399, ரூ.448, ரூ.499, ரூ.509 மற்றும் அதற்கு மேலானவைகள் தான் நிறுவனத்தின் 128 Kbps வேகத்தை அணுக தகுதியான திட்டங்கள் ஆகும்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
வோடா மற்றும் ஐடியாவை குறை கூறமுடியாது, ஏனெனில்.?

வோடா மற்றும் ஐடியாவை குறை கூறமுடியாது, ஏனெனில்.?

ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால் உண்டான கட்டண யுத்தத்தில் சிக்கி சின்னாபின்னமான வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய இரண்டு மற்ற டெலிகாம்களும், இந்த 128 Kbps மாற்றத்தை இன்னும் செயல்படுத்தவில்லை. இந்த விஷயத்தை பொறுத்தவரை வோடா மற்றும் ஐடியாவை குறை கூறமுடியாது, ஏனெனில், இந்நிறுவனங்களுக்கு இணைப்புக்கு தேவையான அத்தியாவ அத்தியாவசிய ஒப்புதல்கள் கிடைக்கவில்லை.

Best Mobiles in India

English summary
Airtel launches Rs 588 prepaid plan offering 3GB data per day for 82 days. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X