Home
News

ஏர்டெல் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்: என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் ஜியோ நிறுவனம் கடந்த
வாரம் சில ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது, அதற்கு போட்டியாக தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் No Daily Limit வசதியுடன் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.456 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 60 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மொத்தமாக 50 ஜிபி டேட்டா நன்மையைத் தினசரி வரம்பு இல்லாமல் வழங்குகிறது. no daily limit வசதியுடன் இந்த திட்டம் வெளிவந்துள்ளதால் இந்த திட்டத்தை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தில்

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ்,ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹெலோட்டூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு இலவச நன்மைகள் கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வாரம் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று வரிவாகப் பார்ப்போம்.

ஜியோவின் ரூ.127 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்

ஜியோவின் ரூ.127 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்

ஆரம்ப விலை திட்டமான ஜியோ ரூ. 127 திட்டமானது 15 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் 12 ஜிபி டேட்டா நன்மையை FUP தினசரி வரம்பு இல்லாமல் திட்டத்தின் செல்லுபடி காலம் முடியும் வரை வழங்குகிறது.

ஜியோவின் ரூ.247 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்

ஜியோவின் ரூ.247 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்

ஜியோவின் வலைத்தளத்தின் தகவல்களின்படி, ரூ .247 விலையுள்ள இந்த திட்டத்தில் தினசரி வரம்புகள் இல்லாமல் 30 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் உங்களுக்கு மொத்தமாக 25 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் கிடைக்கிறது.

 ரூ.447 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்

ரூ.447 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்

ஜியோவின் ரூ. 247 திட்டத்திற்கு அடுத்தபடியா இருப்பதுரூ.447 திட்டமாகும். இந்த திட்டமானது பயனர்களுக்கு 60 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மொத்தமாக 50 ஜிபி டேட்டா நன்மையைத் தினசரி வரம்பு இல்லாமல் வழங்குகிறது. இத்துடன் இதில் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினசரி 100 SMS ஆகியவையும் கிடைக்கிறது.

ரூ.597 திட்டம் மற்றும் ரூ.2397 திட்டத்தின் நன்மைகள்

ரூ.597 திட்டம் மற்றும் ரூ.2397 திட்டத்தின் நன்மைகள்

அடுத்தபடியாக ரூ.597 திட்டமானது பயனர்களுக்கு 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மொத்தமாக 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இறுதியாக ரூ.2397 திட்டமானது பயனர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் நீண்ட நாள் வேலிடிட்டி உடன் மொத்தமாக 365 ஜிபி டேட்டா நன்மையைத் தினசரி வரம்பு இல்லாமல் வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்பு
நன்மையுடன் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.

 மலிவு விலையில் டாப் டக்கர் ரீசார்ஜ் திட்டம் இது தான்

மலிவு விலையில் டாப் டக்கர் ரீசார்ஜ் திட்டம் இது தான்

உண்மையைச் சொல்லப்போனால், ஜியோவின் இந்த திட்டங்கள் நிச்சயம் அதிக பயனர்களால் ரீசார்ஜ் செய்யப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இனிமேல் தினசரி FUP டேட்டா வரம்பு தீர்ந்துவிடுமோ என்ற கவலையே இல்லாமல், பயனர்களின் சொந்த டேட்டா தேவைக்கு ஏற்றார் போல் இனி டேட்டாவை செலவிட முடியும். மெயின் பிளான் உடன் இந்த 5 பிளான்களில் உங்கள் தேவைக்கு ஏற்றபடி ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொண்டால், டேட்டா வரம்பு பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

news source: telecomtalk.info

Best Mobiles in India

English summary
Airtel launches Rs 456 prepaid plan: What are the benefits?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X