ஏர்டெல் அறிமுகம் செய்த ரூ.399 மற்றும் ரூ.833 ப்ரீபெய்ட் திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அருமையான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக பல அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.399 மற்றும் ரூ.833 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.இப்போது ஏர்டெல் அறிமுகம் செய்த இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்று மாதங்களுக்கு அணுகல், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இந்த புதிய திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு இந்த புதியரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவைப் பெறமுடியும். இதுதவிர Airtel Thanks நன்மைகளையும் வழங்குகிறது இந்த புதிய திட்டம். மேலும் ஏர்டெல் ஏற்கனவே அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது. பின்பு இந்ததிட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி 84 நாட்களுக்கு Amazon Prime மெம்பர்ஷிப் உள்ளது. இதுதவிர ஷா அகாடமி படிப்புகள், ஹலோ ட்யூன்கள், Wynk மியூசிக் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதாவது இந்த திட்டம் மொத்தமாக 60ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக், அமேசான் பிரைம் வீடியோக்களின் மொபைல் பதிப்பின் 30-நாள் இலவச சோதனை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய திட்டம்.

ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்;குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.


Click it and Unblock the Notifications