Home
News

ஏர்டெல் ரூ.39 திட்டம் அறிமுகம்.. எத்தனை நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்?

ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் அவ்வப்போது மலிவு விலையில் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். அதுவும் ஏர்டெல் நிறுவனம் சில திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது. எனவே தான் பலர் ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஒரு மலிவு விலை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த மலிவு விலை திட்டம் ஆனது அதிக டேட்டா நன்மையை விரும்பும் வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும். இப்போது அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.39 திட்டம் அறிமுகம்.. எத்தனை நாட்கள் வேலிடிட்டி..

ஏர்டெல் ரூ.39 திட்டம் (Airtel Rs 39 Data Pack):
ஏர்டெல் நிறுவனம் இப்போது ரூ.39 திட்டத்தை தான் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இது ஒரு டேட்டா பேக் ஆகும். நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 3 நாட்கள் ஆகும். ஆகவே ஏர்டெல் ரூ.39 திட்டம் மூலம் மொத்தம் 9ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் ஓடிடி, எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் நன்மைகள் கிடைக்கது.

குறிப்பாக இந்த திட்டம் டேட்டா பேக் உத்தரபிரதேசம் (கிழக்கு), மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் மட்டுமே வழங்கப்படும். அதாவது தேர்வு செய்யப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக மலிவு விலையில் அதிக டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் தேர்வு செய்வது நல்லது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் இரண்டு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

குறிப்பாக 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் ரூ.838 திட்டம். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.39 திட்டம் அறிமுகம்.. எத்தனை நாட்கள் வேலிடிட்டி..

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா ரூ.979 திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel launches Rs.39 data pack plan: check validity and benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X