ஏர்டெல் அறிமுகம் செய்யும் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா?
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் இன்று ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வீதம் 14 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனம் இதற்குமுன்பு அறிவித்துள்ள பல்வேறு சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

ரூ.195/- ப்ரீபெயிட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.195/- ப்ரீபெயிட் திட்டத்தில் தினசரி 1.25ஜிபி டேட்டா வீதம், 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றது.

ஏர்டெல் ரூ.289 /- ப்ரீபெயிட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.289 திட்டத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால் வாடிக்கையாளர்கள் ரூ.289-க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி டேட்டா வீதம் 48நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது

ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம்:
ஏர்டெல் வழங்கும் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம் பொறுத்தவரை நாள்ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வீதம் 75நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏர்டெல் ரூ.299/- ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் அறிவித்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.449 திட்டம் பொறுத்தவரை தினசரி 2ஜிபி விதம் 70 நாட்களுக்க பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் 140ஜிபி டேட்டா கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications