ஏர்டெல்லில் இப்படி ஒரு ரீசார்ஜ் திட்டமா? ரூ 666 விலையில் கிடைக்கும் நன்மைகள்..
இந்தியாவில் உள்ள மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு போட்டியாக ஏர்டெல் சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபத்தில் அதன் அனைத்து பேக்கேஜ்களின் கட்டணத்தை உயர்த்திய பிறகு ரூ. 666 விலையில் புதிய திட்டம் ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் கிடைக்கக் கூட நன்மைகள் என்ன மற்றும் இதே விலையில் கிடைக்கக் கூட மற்ற டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் நன்மைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஏர்டெல் வழங்கும் ரூ. 666 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் வழங்கும் இந்த ரூ. 666 திட்டம் வரையறுக்கப்பட்ட அதிவேக டேட்டா மற்றும் 4ஜி வரம்பு தீர்ந்தவுடன் வரம்பற்ற மெதுவான டேட்டா நன்மையுடன் வருகிறது. இது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் வரையறுக்கப்பட்ட எஸ்எம்எஸ் மற்றும் பல்வேறு ஆன்லைன் தளங்களுக்கான சந்தா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி 84 நாட்களுக்குப் பதிலாகக் குறைவான வேலிடிட்டியை வழங்குகிறது.

எத்தனை நாட்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகும்?
ஏர்டெல் ரூ.666 திட்டம் 77 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் பலன்களை வழங்குகிறது. உண்மையில் உங்களுக்கு 84 நாட்களுக்குப் பலன்களை வழங்கும் திட்டம் தான் வேண்டும் என்றால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்கள் ஏர்டெல் மொபைல் எண்களை ரூ. 719 விலை கொண்ட திட்டத்தைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். ஏர்டெல் ரூ. 666 திட்டமானது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. வரம்பு தீர்ந்தவுடன், இணைய வேகம் 64kbps ஆக குறைக்கப்படும்.

பல டிஜிட்டல் தளங்களுக்கான இலவச சந்தா
வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் புதிய திட்டத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையை பெறுகிறார்கள். முன்பே சொன்னது போல், இது 77 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் இந்த திட்டத்தின் நன்மைகள் முடிந்துவிட்டதா என்றால் இல்லை, ஏர்டெல்லின் இந்த புதிய திட்டத்துடன் பல டிஜிட்டல் தளங்களுக்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.

ரூ. 666 தொகுப்பில் வழங்கப்படும் மற்ற நன்மைகள்
இந்த திட்டத்துடன் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் ஒரு மாத சோதனையை வாடிக்கையாளர்கள் தொகுப்புடன் பெறுகிறார்கள். ரூ. 666 தொகுப்பில் வழங்கப்படும் மற்ற நன்மைகள் என்று பார்க்கையில் இது உங்களுக்கு Apollo 24/7 Circle இன் மூன்று மாத இலவச அணுகலை வழங்குகிறது. Shaw Academy மற்றும் Wynk Musicக்கான சந்தா, FASTag ரீசார்ஜ்களில் கேஷ்பேக் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் போன்ற பல நன்மைகள் வழங்கப்பட்டுள்ளது.

Vi ரூ 666 திட்ட பலன்கள்
ஏர்டெல்லின் போட்டியாளரான வோடபோன் ஐடியா அல்லது விஐ நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 666 திட்டங்களை வழங்குகிறது. தொலைத்தொடர்பு தொகுப்பு, தொகுப்பின் கீழ் கிட்டத்தட்ட இதே போன்ற பலன்களை வழங்குகிறது. தொகுப்பின் செல்லுபடியாகும் காலம் கூட 77 நாட்கள் ஆகும். இருப்பினும், Vi தொலைத்தொடர்பு நிறுவனம் Binge All Night போன்ற பலன்களை வழங்குகிறது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற அதிவேக டேட்டாவைப் பெறலாம். பேக்கேஜில் உள்ள மற்ற வசதிகளில் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட் ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications