Home
News

ரூ.48-க்கு 3ஜிபி டேட்டா கொடுத்து அசத்திய ஏர்டெல்: பலே வேலிடிட்டி.! எங்க ஜியோவை காணோம்?

ஏர்டெல் ரூ.495 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று ரூ.48 மற்றும் ரூ.98 பீரிபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து சிறப்பான சலுகைகளை வழங்கியுள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாக
ஜியோ நிறுவனம் எந்தவொரு சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.48-க்கு 3ஜிபி டேட்டா கொடுத்து அசத்திய ஏர்டெல்:  பலே வேலிடிட்டி.!

குறிப்பாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.48-பீரிபெய்ட் திட்டதில் ரீசார்ஜ் செய்தால் 28நாட்களுக்கு 3ஜிபி டேட்டா கிடைக்கும்,அதேபோல் ரூ.98-பீரிபெய்ட் திட்டதில் ரீசார்ஜ் செய்தால் 6ஜிபி டேட்டா 28நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும், பின்பு ரூ.98 ரூபாய் ரீசார்ஜ்-க்கு மட்டும் கூடுதலாக தினமும் 10எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த சிறப்பான திட்டங்களைப் பார்ப்போம்.

 ரூ.248 பிரீபெய்ட்  திட்டம்:

ரூ.248 பிரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் புதிய பயனர்களுக்கு ரூ.248 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் கால் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.178 பிரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் ரூ.178 பிரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.178 பிரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடேட் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியம். மேலும் 1ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ்,ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்தடதில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.495 திட்டம்:

ஏர்டெல் ரூ.495 திட்டம்:

ஏர்டெல் ரூ.495 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் வழங்கும், இந்த ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 6 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் எஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.இத்துடன் ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் டிவி ஆப் மூலம் நேரடி லைவ் டி.வி. மற்றும் உள்ளடக்கப் பயன்பாட்டினை இலவசமாகப் பெறலாம்.

ரூ.998 பிரீபெய்ட் திட்டம்:

ரூ.998 பிரீபெய்ட் திட்டம்:

இத்திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் எஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 12 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.1,699 திட்டம்

ஏர்டெல் ரூ.1,699 திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.1,699 திட்டம் வோடபோனின் புதிய திட்டத்திற்கு போட்டியாக அமைந்துள்ளது, அதன்படி ஏர்டெல் ரூ.1,699 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel launches new Rs 48, Rs 98 data packs with 28 days validity: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X