Home
News

போட்றா வெடிய! இப்படி ஒரு ரீச்சர் பிளானை தான் எதிர்பார்த்தோம்! Airtel செய்த மாஸ் வேலை!

ஏர்டெல் நிறுவனம் அதன் வடிக்கையாளர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை புதுமையான நன்மையுடன் வழங்க துவங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் பட்ஜெட் பிரியர்களை கவரும் விதத்தில், அட்டகாசமான நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

பார்தி ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்கோ தனது ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவில் அதன் பயனர்களுக்காக பட்ஜெட் விலையில் புதிய சேர்ப்பாக ரூ.289 சலுகையை அமைதியாகச் சேர்த்துள்ளது. இந்த திட்டம் பயனர்களுக்கு டேட்டா அனுபவத்தை விட வேலிடிட்டியை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது.

போட்றா வெடிய! இப்படி ஒரு Airtel ரீச்சர் பிளானை தான் எதிர்பார்த்தோம்!

இது, அதன் பயனர்களுக்கு 35 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இப்படி ஒரு தனித்துவமான நன்மையை வழங்கும் பார்தி ஏர்டெல்லின் முதல் திட்டம் இதுவாகும். இந்தத் திட்டம் இப்போது பார்தி ஏர்டெல்லின் இணையதளத்திலும், ஏர்டெல் தேங்க்ஸ் மொபைல் ஆப்ஸ் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதனால், பயனர்கள் உடனே ரீசார்ஜ் செய்யலாம்.

இந்த திட்டத்தின் முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். பார்தி ஏர்டெல்லின் ரூ.289 திட்டம் 35 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்தத் திட்டம் பயனர்களுக்கு 4 ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. இத்துடன் இதில், 300 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை ஆகியவை கிடைக்கிறது. ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையாக - அப்பல்லோ 24|7 சர்க்கிள் நன்மையுடன் வருகிறது.

இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் வின்க் மியூசிக் இலவச அணுகல் ஆகியவற்றுடன் கூடுதல் நன்மையை வழங்குகிறது. வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இதுபோன்ற ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்காததால், இது அனைத்து வகையான தனித்துவமான திட்டமாகும். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவு வெறும் ரூ. 8.25 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

போட்றா வெடிய! இப்படி ஒரு Airtel ரீச்சர் பிளானை தான் எதிர்பார்த்தோம்!

ஆனால் ஏர்டெல்லிலிருந்து நீங்கள் பார்க்கக்கூடிய மற்றொரு செல்லுபடியாகும் திட்டமும் அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ளது. இது 199 ரூபாய்க்கு வருகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ரூ.289 திட்டத்தில் உள்ள அதே ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளை வழங்குகிறது. அத்துடன், 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ரூ.199 திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவு ரூ.6.63 மட்டுமே.

இது உண்மையில் புதிய ரூ.289 திட்டத்தை விட மிகவும் மலிவு. உங்கள் தேவையைப் பொறுத்து, நீங்கள் ஏர்டெல் வழங்கும் ரூ.289 திட்டம் அல்லது ரூ.199 திட்டத்திற்கு செல்லலாம். பார்தி ஏர்டெல் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 5ஜியை அதிவேகமாக வெளியிட்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவை அணுகும் சலுகையையும் வழங்கி வருகிறது. ரூ. 239 அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்பவருக்கு, ஏர்டெல்லின் இலவச வரம்பற்ற 5ஜி டேட்டா கிடைக்கும்.

ரூ. 289 திட்டம் ஏர்டெல் பயனர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டாவைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறக்கூடிய சலுகையை வழங்கும் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. உங்களுக்கு அதிக வேலிடிட்டி குறைந்த விலையில் வேண்டுமென்றால், திட்டத்தை தாராளமான தேரசு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Airtel Launches New Rs 289 Prepaid Plan With 35 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X