வாரா வாரம் ஒரு டீல்...ஏர்டெல் ரெடி நீங்க ரெடியா?

Posted By: Staff
வாரா வாரம் ஒரு டீல்...ஏர்டெல் ரெடி நீங்க ரெடியா?
புதிய ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் 60-டேஸ் 60-டீல்ஸ் என்ற புதிய திட்டத்தினை வழங்குகிறது.

புதிய தொலைத்தொடர்பு சேவைக்கும் மாற வேண்டும், அதே சமயம் புதிய சலுகைகளையும் அதில் பெற வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் 60-டேஸ், 60 டீல்ஸ் என்ற இந்த புதிய திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் விவரங்களை தெளிவாக பார்க்கலாம்.

நாம் செய்யும் முக்கியமான போன்கால்களை பிறர் எடுக்க தவறிவிட்டால், ஒரு எஸ்எம்எஸ் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. இதனால் திங்கட்கிழமை எஸ்எம்எஸ் சேவையில் சில சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல்.

டேட்டா டீல் வசதியில் சில புதிய சலுகைகளையும், புதன்கிழமையில் எஸ்டிடி கால் செய்யும் வசதியில் சில புதிய சலுகைகளையும் பெறலாம்.

வியாழக்கிழமை டாக் டைமில் சில சலுகைகளையும், வெள்ளி மற்றும் ஞாயிறுகிழமைகளில் வேல்யூ ஏடடு சேவையில் புதிய சலுகைகளையும், ஆகஸ்டு மாதம் புதிதாக ஏர்டெல் தொலை தொடர்பு சேவையினை பெறும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

பொதுவாக சனிக்கிழமை நிறைய பேருக்கு ஓய்வு நாட்களாக இருக்கிறது. இதனால் நண்பர்கள், உறவினர்களுடன் அதிக நேரம் மொபைலில் பேசுகின்றனர். இதனால் ஏர்டெல் நிறுவனம் இந்த 60-டேஸ், 60-டீல்ஸ் என்ற புதிய திட்டத்தில், சனிக்கிழமை இரவு நேரத்தில் செய்யப்படும் போன்கால்களில் சில புதிய சலுகைகளையும் வழங்குகிறது.

இதோடு ஏர்டெல் நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை அடுத்து வோடாஃபோன் நிறுவனம் 12.2 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இப்போது ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த புதிய 60-டேஸ், 60-டீல்ஸ் திட்டம் ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய உற்சாகத்தினை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்டு 1ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 31ம் தேதிக்குள் ஏர்டெல் தொலை தொடர்பு சேவையில் இணைபவர்களுக்கு வழங்க இருக்கிறது ஏர்டெல்.  60-டேஸ் 60 டீல்ஸ் என்ற புதிய திட்டத்தின் மூலம் நிறைய சலுகைகளை வழங்க உள்ளது.

அதோடு இந்த சலுகைகள் புதிய வாடிக்கையாளர்களுக்கு முதல் 60 நாட்களுக்கு பெறலாம். இது பற்றிய இன்னும் விவரமான தகவல்களை ஏர்டெல் கஸ்டமர் கேர் சேவையின் மூலம் தெளிவாக தெரிந்து கொண்டு, அதன் பின் இணையலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்