Home
News

Airtel: நாடு விட்டு நாடு., கண்டம் விட்டு கண்டம் : அதிரடியாக 4 புதிய திட்டங்கள்

சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு என்று ஏர்டெல் நான்கு புதிய சர்வதேச ரோமிங் ரீசார்ஜ் திட்டங்களை இணைத்துள்ளது. இந்த திட்டங்களானது ரூ. 648, ரூ. 755, ரூ. 799, மற்றும் ரூ. 1,199 ஆகிய விலையில் கிடைக்கிறது. இந்த திட்டங்களானது அனைத்து ஏர்டெல் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மற்றும் கிளைகளில் கிடைக்கிறது.

டெல்கோ சர்வதேச ரோமிங் கட்டணம்

டெல்கோ சர்வதேச ரோமிங் கட்டணம்

கடந்த ஆண்டு டெல்கோ சர்வதேச ரோமிங் கட்டணங்களுக்கு ரூ.99 விலையை நிர்ணயித்தது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ இதற்கென்று எந்த கட்டணத்தை தனியாக வசூலிக்கவில்லை.

ஏர்டெல் ரூ. 648 சர்வதேச ரோமிங் திட்டம்

ஏர்டெல் ரூ. 648 சர்வதேச ரோமிங் திட்டம்

ரூ.648-க்கு வழங்கப்படும் சர்வதேச ரோமிங் திட்டத்தில். 500 எம்பி தரவு சலுகைகள் கொடுக்கிறது. அதோடு 100 நிமிட அழைப்பு வசதிகள் அதாவது 100 நிமிட உள் அழைப்பு மற்றும் வெளி அழைப்பு உட்பட்டது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்றால் 100 நிமிட அழைப்புகளில் உள்நாட்டு அழைப்புகளும் உட்படுத்தப்படும். அதேபோல் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக்கு சேர்ந்து ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் அனுப்பப்படுகிறது.

ரூ. 648 திட்டம் செல்லுபடியாகும் நாடுகள்

ரூ. 648 திட்டம் செல்லுபடியாகும் நாடுகள்

இந்த திட்டங்களானது கீழே வழங்கப்பட்டுள்ள நாடுகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

பிரேசில்

ஈரான்

ஈராக்

ஜப்பான்

ஜோர்டான்

நேபாளம்

பாலஸ்தீனம்

கத்தார்

ரஷ்யா

சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.

இந்த நாடுகளுக்கும் செல்லுபடியாகும்

இந்த நாடுகளுக்கும் செல்லுபடியாகும்

அல்பேனியா

பெல்ஜியம்

சீனா

எகிப்து

பிரான்ஸ்

இந்தோனேசியா

நோர்வே

ஸ்பெயின்

இங்கிலாந்து

அமெரிக்கா

ஏர்டெல் ரூ. 755 சர்வதேச ரோமிங் திட்டம்

ஏர்டெல் ரூ. 755 சர்வதேச ரோமிங் திட்டம்

இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து பார்க்கலாம். அந்த திட்டமானது ரூ.755 சர்வதேச ரோமிங் திட்டமாக கிடைக்கிறது. இந்த திட்டமானது ஐந்து நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியாவுக்குள் வருபவர்கள் விமான நிலையத்திலேயே சிம்கார்ட் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூ. 755 திட்டம் செல்லுபடியாகும் நாடுகள்

ரூ. 755 திட்டம் செல்லுபடியாகும் நாடுகள்

இந்த திட்டங்களானது அல்பேனியா, பஹாமாஸ், பூட்டான், கனடா, ஹாங்காங், ஈரான், இத்தாலி, கொரியா, மெக்சிகோ, நேபாளம், நியூசிலாந்து, இலங்கை, தாய்லாந்து, அமெரிக்கா ஆகியவைகளுக்கு கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ. 799 சர்வதேச ரோமிங்

ஏர்டெல் ரூ. 799 சர்வதேச ரோமிங்

ரூ. 799 சர்வதேச ரோமிங் ரீசார்ஜ் திட்டமானது 100 நிமிட உள்ளூர் மற்றும் சர்வதேச வெளிச்செல்லும் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டமானது 30 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டமானதும் ரூ.755-க்கு வழங்கப்படும் அதே நாடுகளுக்கு வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.1,199 இன்டர்நேஷனல் ரோமிங் திட்டம்

ஏர்டெல் ரூ.1,199 இன்டர்நேஷனல் ரோமிங் திட்டம்

ரூ. 1,199 விலைக்கு வழங்கப்படும் திட்டங்களானது 1 ஜிபி டேட்டா சலுகைகளை வழங்குகிறது. அதேபோல் 100 நிமிட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டமும் 30 நாட்கள் செல்லுபடியாகும். ரூ. 755 மற்றும் ரூ. 799 ஆகிய திட்டங்களுக்கு வழங்கப்படும் அதே நாடுகளுக்கு இந்த திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Launches Four New International Roaming Plans Starts from lowest price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X