Subscribe to Gizbot

எப்போது வேண்டுமானாலும் ஜியோபைபர் வெளியாகலாம்; பீதியில் ஏர்டெல் பார்த்த வேலை.!

Written By:

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையானது கூடிய விரைவில் வணிக ரீதியாக சந்தைகுள் புயலாய் நுழையுமென (அதிகபட்சம் அடுத்த ஆண்டு தொடக்கம்) பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோபைபர் வெளியாகலாம்; பீதியில் ஏர்டெல் பார்த்த வேலை.!

மும்பை, தில்லி-என்.சி.ஆர், அஹமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா ஆகிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஜியோ அதன் இலவச பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர் (JioFiber) முன்னோட்டத்தை வழங்கி வருகிறது என்பதே அதற்கு எடுத்துக்காட்டு.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தரவு பரிமாற்ற வசதி.!

தரவு பரிமாற்ற வசதி.!

இந்நிலைப்பாட்டில், ஜியோபைபர் முன்னோட்டம் நாடு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் அறிமுகமாகலாம் என்பது ஒருபக்கமிருக்க நேற்று (செவ்வாய்க்கிழமை) வோடபோன் அதன் புதிய ரெட் திட்டங்களின் மூலம் இந்தியாவில் அதன் வயர்லெஸ் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான தரவு பரிமாற்ற வசதிகளை (ரெட் டிராவலர், ரெட் இன்டர்நேஷனல்மூ மற்றும் ரெட் சிக்னேசர்) அறிமுகப்படுத்தியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை.!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை.!

ஜியோவின் வருகையையொட்டி வோடபோன் நிறுவனமே புதிய திட்டங்களை புகுத்த நினைக்கும் போது 2.1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஹோம் பிராட்பேண்ட் வழங்குனரான ஏர்டெல் .அமைதியாக இருக்குமா.? - முன்னெச்சரிக்கை நடவடிக்கை எண்ணத்தில் ஏர்டெல் அதன் பிராண்ட்பேண்ட் பயனர்களுக்கான புதிய வசதியொன்றை அறிமுகம் செய்துள்ளது.

1000 ஜிபி டேட்டா வரை தரவு.!

1000 ஜிபி டேட்டா வரை தரவு.!

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், அதன் உள்நாட்டு பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கான டேட்டா ரோல்ஓவர் (தரவு பரிமாற்ற) வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியானது, அதன் வாடிக்கையாளர்கள் 1000 ஜிபி டேட்டா வரை தரவுகளை திரட்ட உதவும்.

ஏர்டெல் வி-பைபர் + டேட்டா ரோல்ஓவர்.!

ஏர்டெல் வி-பைபர் + டேட்டா ரோல்ஓவர்.!

"இந்த புதுமையான முறையின் கீழ், எங்கள் சேவைகளை பெறும் பிராட்பேண்ட் பயனர்கள் தங்கள் உபயோகமற்ற தரவைப் பற்றி இனி கவலைப்பட வேண்டியதில்லை, அந்த தரவு எப்போதும் அவர்களுக்கு கிடைக்கும். ஏர்டெல் வி-பைபர் மற்றும் 'டேட்டா ரோல்ஓவர்' ஆகியவற்றின் கலவையை இன்றைய டிஜிட்டல் இல்லங்களுக்கு உண்மையிலேயே உலக வர்க்க அனுபவத்தை வழங்கும்" ஜார்ஜ் மாத்தேன் (சிஇஓ ஹோம்ஸ், பார்தி ஏர்டெல்) தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் சர்ப்ரைசஸ் மற்றும் மைஹோம் ரிவார்ட்ஸ்.!

ஏர்டெல் சர்ப்ரைசஸ் மற்றும் மைஹோம் ரிவார்ட்ஸ்.!

தவிர, ஜியோபைபருடன் போட்டியிடும் பொருட்டு, வினாடிக்கு 1 ஜிகாபைட் வரை வேகத்தை ஏர்டெல் வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு இலவச கூடுதல் தரவு நன்மைகளை வழங்கும் ஏர்டெல் சர்ப்ரைசஸ் மற்றும் மைஹோம் ரிவார்ட்ஸ் ஆகிய திட்டங்களையும் ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.

100 எம்பிபிஎஸ் வரை வேகம்.!

100 எம்பிபிஎஸ் வரை வேகம்.!

இது தவிர, ஏர்டெல் நிறுவனத்தின் 'வி-பைபர்' ஆனது 100 எம்பிபிஎஸ் வரை வேகத்தை வழங்குகிறது. இப்போது இந்தியாவில் மொத்தம் 87 நகரங்களில் வி-பைபர் சேவை கிடைக்கிறது. 'வி-பைபர்' சேவையானது, செப்பு-சார்ந்த நிலையான-வலையமைப்பு ஆகும். இது 100எம்பிபிஎஸ் வரை வழங்குவதற்கு அனுமதிக்கும் வெக்டரைசேஷன் (vectorization) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பிராட்பேண்ட் சேவை இல்லாத பகுதிகளில் கூட வி-பைபர் சேவை கிடைக்கும்.

மிக நெரிசலான இடங்களாக இருக்கும்.!

மிக நெரிசலான இடங்களாக இருக்கும்.!

இந்த அவசர அவசரமான சேவைகளுக்கும், அதிரடி சலுகைகளுக்கு ஆதிகாரணமான ரிலையன்ஸ் ஜியோவானது, வருகிற டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 100 இடங்களை ஜியோபைபர் மூலம் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஜியோபைபர் இணைப்பை பெறும் பகுதிகள் உயர் அடுக்கு குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற மிக நெரிசலான இடங்களாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பெரிய பணமாக்கத்தக்க வாய்ப்பு.!

அடுத்த பெரிய பணமாக்கத்தக்க வாய்ப்பு.!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியின் சமீபத்தில் "நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபர் மற்றும் நிலையான பிராட்பேண்ட் சேவையானது, ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்த பெரிய பணமாக்கத்தக்க வாய்ப்பாக இருக்கும்" என்று கூறியுள்ளதும், ஜியோபைபர் மீதான ஆர்வத்தை எகிற வைக்கிறது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Airtel launches data rollover facility for broadband customers ahead of JioFiber launch. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot