Home
News

அடி தூள்.. இனி அந்த தொல்லை இருக்காது.. AI அம்சம் கொண்டுவந்த ஏர்டெல்.. உற்சாகத்தில் பயனர்கள்.!

ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இன்று ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முதல் நெட்வொர்க் அடிப்படையிலான ஏஐ (AI) ஆற்றல் பெற்ற ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது ஏர்டெல் பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளால் (எஸ்எம்எஸ்) ஏற்படும் சிக்கலைக் கணிசமான அளவில் தீர்க்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் முதன்முதலாக இந்த தீர்வை ஏர்டெல் வழங்குகிறது. ஏர்டெல் கொண்டுவந்துள்ள இந்த புதிய ஏஐ அம்சம் ஆனது சந்தேகத்திற்குரிய அனைத்து ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் குறித்த எச்சரிக்கையைப் பயனர்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடி தூள்.. இனி அந்த தொல்லை இருக்காது.. AI அம்சம் அறிமுகம் செய்த Airtel

இந்த புதிய வசதியானது இலவசமாக அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும் சேவை கோரிக்கையை எழுப்பாமலேயே அல்லது செயலியைப் பதிவிறக்கம் செய்யாமலே தானாகச் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவன இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கோபால்‌ விட்டல்‌ தெரிவித்தது என்னவென்றால், பயனர்களுக்கு ஸ்பேம் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த 12 மாதங்களாக இதை முழுமையாக அகற்ற எங்கள் முயற்சியைச் செலவிட்டோம்.

மேலும் இந்தியாவில் ஏஐ அம்சம் கொண்ட ஸ்பேம் இல்லாத நெட்வொர்க்கை இன்று அறிமுகம் செய்தது ஒரு மிகப்பெரிய சாதனையாக உள்ளது. எங்களது பயனர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்‌ தேவையற்ற ஸ்பேம் அழைப்புகளில் இருந்து இந்த புதிய வசதி பாதுகாக்கும்‌ என்று அவர் கூறினார். அதேபோல் ஏர்டெல் கொண்டுவந்துள்ள இந்த தீர்வில் இரண்டு பில்டர்கள் உள்ளன. ஒன்று நெட்வொர்க் அடுக்கில் இருக்கிறது. இரண்டாவது ஐடி சிஸ்டம்ஸ் அடுக்கில் உள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு நாளும் 10 கோடி ஸ்பேம் அழைப்புகளையும், 30 லட்சம் ஸ்பேம் எஸ்எம்எஸ்-களையும்‌ எங்கள்‌ தீர்வால்‌ வெற்றிகரமாக அடையாளம்‌ காண முடிகிறது. மேலும் எங்கள்‌ வாடிக்கையாளர்களைப்‌ பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும் என்று கோபால்‌ விட்டல்‌ தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஏர்டெல் கொண்டுவந்துள்ளது இந்த புதிய வசதி அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் மலிவு விலையில் டேட்டா பேக் மற்றும் இரண்டு திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கியது. இப்போது அந்த திட்டங்கள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சமீபத்தில் இந்நிறுவனம் ஏர்டெல் ரூ.26 டேட்டா பேக் (Airtel Rs 26 data pack) அறிமுகம் செய்தது. இந்த திட்டம் ஒரு நாள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இதில் ரீசார்ஜ் செய்தால் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.22 திட்டம் 1ஜிபி டேட்டாவும், ரூ.33 திட்டம் 2ஜிபி டேட்டாவும், ரூ.49 திட்டம் அன்லிமிடெட் டேட்டாவும் வழங்குகின்றன. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.11 திட்டம் ஆனது 1 மணி நேரத்திற்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடி தூள்.. இனி அந்த தொல்லை இருக்காது.. AI அம்சம் அறிமுகம் செய்த Airtel

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.77 டேட்டா பேக் (Airtel Rs 77 data pack) ஆனது முன்பு 4ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த பேக்கில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 5ஜி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி உங்களுடைய பேஸ் பிளானின் சர்வீஸ் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். இதுதவிர ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரூ.77 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 1ஜிபி டேட்டாவைப் பெறமுடியும். எனவே இதில் மொத்தமாக 6ஜிபி வரை டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.121 டேட்டா பேக் (Airtel Rs 121 data pack) ஆனது முன்பு 5ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த பேக்கில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 6ஜி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி உங்களுடைய பேஸ் பிளானின் சர்வீஸ் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். அதேபோல் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரூ.121 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 2ஜிபி டேட்டாவைப் பெறமுடியும். எனவே இதில் மொத்தமாக 8ஜிபி வரை டேட்டா கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel launches AI-powered real-time spam detection solution in India: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X