Airtel அறிமுகம் செய்த "ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டம்": ரூ.109 முதல் ரூ.131 வரை மொத்தம் 4 திட்டங்கள்!

|

ஏர்டெல் நிறுவனம் 4 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் இரண்டு ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டம், இரண்டு கட்டணக் குறைப்பு திட்டம் அடங்கும். இந்த 4 திட்டங்களின் விலை ரூ.109 முதல் ரூ.131 வரை இருக்கிறது. பட்ஜெட் விலை பயனர்களை குறிவைத்து 4 திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்

4 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்

4 புதிய ரீசார்ஜ் திட்டங்களும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.109, ரூ.131, ரூ.128 மற்றும் ரூ.111 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நான்கு திட்டங்களின் அதிகபட்ச விலையே ரூ.131 ஆகும். இதில் இரண்டு ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் இரண்டு கட்டணக் குறைப்பு திட்டங்கள் அடங்கும். 4 திட்டங்களின் பிரதான நோக்கம் ஒருவர் தங்களின் சாதனத்தை அதிக செலவின்றி செயலில் வைத்திருக்க உதவும். திட்டத்தின் விலை மற்றும் கிடைக்கும் நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

ஏர்டெல் ரேட் கட்டர் திட்டங்கள்

ஏர்டெல் ரேட் கட்டர் திட்டங்கள்

ரூ.109 ரீசார்ஜ் திட்டம் ஆனது ரேட் கட்டர் திட்டமாகும். இந்த திட்டம் மொத்தம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 200 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.99 மதிப்புள்ள குரல் அழைப்பு நேரங்களுக்கான நன்மைகள் இதில் இருக்கிறது. எஸ்டிடி மற்றும் லேண்ட்லைன் குரல் அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ.2.5 பைசா செலவாகும். உள்ளூர் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1 எனவும் எஸ்டிடி எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1.44 எனவும் வசூலிக்கப்படும்.

Apple ஐபோன் 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ் விலை என்ன?- காத்திருந்து வாங்கலாமா, பட்ஜெட் தாங்குமா?Apple ஐபோன் 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ் விலை என்ன?- காத்திருந்து வாங்கலாமா, பட்ஜெட் தாங்குமா?

ரூ.111 ரீசார்ஜ் திட்டம்

ரூ.111 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.111 மதிப்புள்ள பிளான் ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டம் ஒரு மாத வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. ரூ.99 டாக் டைம் வழங்கப்படுகிறது. இதனுடன் 200 எம்பி டேட்டா கிடைக்கிறது. உள்ளூர், எஸ்டிடி மற்றும் லேண்ட்லைன் அழைப்புகள் வினாடிக்கு ரூ.2.5 செலவாகும், உள்ளூர் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1 எனவும் எஸ்டிடி எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1.5 எனவும் வசூலிக்கப்படும்.

ரூ.128 ரீசார்ஜ் பிளான்

ரூ.128 ரீசார்ஜ் பிளான்

ரூ.128 மதிப்புள்ள புதிய ரீசார்ஜ் திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டியை கொண்டிருக்கிறது. உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ.2.5 வசூலிக்கப்படும், தேசிய வீடியோ அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ.5 வசூலிக்கப்படும். மொபைல் டேட்டா நிறைவடைந்த பிறகு 1 எம்பி டேட்டாவிற்கு ரூ.0.50 பைசா வசூலிக்கப்படும்.

ஏர்டெல் ரூ.131 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.131 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.131 ரீசார்ஜ் திட்டமானது முழுமையாக 1 மாதம் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் பயனர்கள் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ.2.5 மற்றும் தேசிய வீடியோ அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ.5 வசூலிக்கப்படும். உள்ளூர் எஸ்எம்எஸ் கட்டணம் ரூ.1 எனவும் எஸ்டிடி எஸ்எம்எஸ் கட்டணம் ரூ.1.5 எனவும் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்த பிறகு ரூ.0.50 1 எம்பி டேட்டாவிற்கு வசூலிக்கப்படும்.

காபி ஆர்டர் எடுத்து சர்வ் செய்யும் காபி ஆர்டர் எடுத்து சர்வ் செய்யும் "Twitter CEO": நீங்க நம்பலனாலும் அதான் நிஜம்!

சிறந்த நன்மைகளுடன் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள்

சிறந்த நன்மைகளுடன் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள்

மேலே தொகுத்து வழங்கப்பட்டுள்ள நான்கு திட்டங்களும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும். அடுத்ததாக சிறந்த நன்மைகளுடன் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களை பார்க்கலாம். ரூ.239 ரீசார்ஜ் திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு உட்பட தினசரி 100 எஸ்எம்எஸ்-கள் வழங்கப்படுகிறது. ரூ.299 ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்-கள் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Launches 4 new Recharge Plans in india: Price Rs.109 to Rs.131

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X