கபாலி ஸ்பெஷல் : இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமாம்.!
கபாலி திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கிய நாள் முதல் இன்று வரை, கபாலி சார்ந்த ஒவ்வொரு சிறிய தகவல்களும் ரஜினி ரசிகர்கள் உட்படச் சினிமா பிரியர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருவது அனைவரும் அறிந்ததே.
பல்வேறு வணிக நிறுவனங்களும் கபாலியை பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. உலகம் முழுக்க எதிர்பார்ப்பை எகிற வைத்திருப்பதால் கபாலி மோகம் எந்த நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை.
தனது விமானம் முழுக்கு கபாலி வரைபடங்களால் அலங்கரித்து விசேஷ காட்சியை ஏற்பாடு செய்து ஏர்ஏசியா துவக்கி வைத்த கபாலி சலுகையை இன்று ஏர்டெல் நிறுவனமும் கையில் எடுத்திருக்கின்றது.

சலுகை
அதன் படி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் கபாலி ரீசார்ஜ் பேக், 2ஜி இண்டர்நெட், கபாலி ஹெல்லோ டியூன் மற்றும் கபாலி பிரான்டு சிம் பேக் போன்றவை அடங்கும்.

இண்டர்நெட்
கபாலி ரீசார்ஜ் பேக் மூலம் ரூ.5க்கு ரீசார்ஜ் செய்து 60 நிமிடங்களுக்கான அன்லிமிடெட் 2ஜி இண்டர்நெட் டேட்டா பயன்படுத்த முடியும்.

சிம் பேக்
விசேஷ கபாலி சிம் பேக் பிரத்தியேக கபாலி பிரான்டிங் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்து
இதோடு ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, திரைப்படம் வெற்றி பெற எஸ்எம்எஸ் மூலம் வாழ்த்து தெரிவிக்க முடியும். இதற்கு உங்களது பெயர் மற்றும் தகவல்களை டைப் செய்து 53030 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதுமானது.

நினைவு
ரசிகர்கள் அனுப்பும் வாழ்த்து குறுந்தகவல்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நினைவுச்சின்னமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்லோ டியூன்
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 578785 என்ற எண் அழைப்பு விடுத்து கபாலி பிரத்தியேக ஹெல்லோ டியூன்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

விளம்பரம்
மேலும் கபாலி திரைப்படத்தின் முன்னோட்டம், பிரத்தேயக வீடியோக்களை திரையிடும் பிரத்தியேக 3டி ஹாலோகிராஃபிக் வாகனம் தமிழகம் முழுக்க சுற்றி வரும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

வியாபாரம்
கபாலி ஏர்டெல் சலுகை ஒட்டு மொத்த திரைப்பட ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், இதன் மூலம் திரைப்படம் விளம்பரம் செய்யப்படுவதோடு ஏர்டெல் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களை அதிகரித்து கொள்ளும் என்பதை யாரும் மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications