Airtel கொண்டுவந்த புது ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்.. தினமும் 2ஜிபி டேட்டா, ஹாட்ஸ்டார்.. எவ்வளவு நாள் வேலிடிட்டி?
ஜியோ (Jio) நிறுவனம் ஜியோ புது வருட ஆபர் ரூ 2025 திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில் ஏர்டெல் (airtel) நிறுவனமும் ஒரு மலிவு விலை திட்டத்தை அறிமுகம் செய்து அதில் ஓடிடி சந்தாவும் கொடுத்து அசத்தியுள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தை (airtel rs 398 Prepaid plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஏர்டெல் அறிமுகம் செய்த ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 398 Prepaid plan details) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்களுக்குடிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது. குறிப்பாக இந்த ஓடிடி சந்தா மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது.
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக கம்மி விலையில் ஓடிடி சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. மேலும் ஏற்கனவே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கி வந்த ஏர்டெல் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ 549 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 549 Prepaid plan) ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா கிடைக்கும். குறிப்பாகத் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும்.
வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1029 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த ஏர்டெல் ரூ.1029 திட்டமும் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும்.
மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle)உள்ளிட்ட நன்மைகள் ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அலிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்.
இந்த ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தாவை வழங்குகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ்,அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music), அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் விரைவில் ஏர்டெல் நிறுவனம் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications