புதிய சர்வதேச ரோமிங் திட்டங்கள் : ஏர்டெல் அறிவிப்பு!
பாரதி ஏர்டெல் நிறுவனம் புதிய சலுகைகளுடன் சர்வதேச ரோமிங் திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய சர்வதேச ரோமிங் திட்டங்களில் டேட்டா, இலவச இந்திய அழைப்புகள், இலவச குறுந்தகவல்கள், மற்றும் இலவச இன்கமிங் அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகின்றன. ஏர்டெல் புதிய சர்வதேச ரோமிங் திட்டங்கள் ஒரு நாள் மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

வேலிடிட்டி
இதே போல் 10 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் அக்டோபர் மாதத்தின் மத்தியில் அறிவிக்க இருக்கின்றது. இத்திட்டங்களின் மிக முக்கிய அம்சமாக இருப்பது இவற்றை ஆன்லைன் மூலமாக ஏர்டெல் இணையதளங்களில் இருந்தே ஆக்டிவேட் செய்ய முடியும் என்பதே ஆகும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மைஏர்டெல் ஆப்
ஸ்மார்ட்போன் கருவிகளில் மைஏர்டெல் ஆப் பயன்படுத்தும் பயனர்களும் புதிய ரோமிங் திட்டங்களை ஆப் மூலமாக ஆக்டிவேட் செய்ய முடியும். இல்லையெனில் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் தொடர்பு கொள்ளலாம்.

பயனர்கள்
ஏர்டெல் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் புதிய ரோமிங் திட்டங்கள் பயன்படுத்தலாம் என்பதோடு பயன்பாடு முடிந்ததும் பணம் செலுத்தலாம். இத்திடங்கள் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்குக் கிடைக்கின்றது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கட்டணம்
அனைத்துப் பகுதிகளிலும் ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட சர்வதேச ரோமிங் கட்டணத்தைப் பொருத்த வரை ரூ.649 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் 10 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கான விலையை இன்னும் வெளியிடவில்லை. மேலும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு ரூ.3000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சலுகை
ஏர்டெல் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரோமிங் திட்டத்தில் அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு ரூ.4,999 கட்டணத்தில் 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் இன்கமிங் அழைப்புகள் மற்றும் 400 நிமிடங்களுக்கு இலவச அழைப்புகளை இந்தியாவிற்கும் அன்லிமிட்டெட் குறுந்தகவல்களை இந்தியாவிற்கு வழங்குகின்றது. திட்டம் நிறைவடைந்ததும் எம்பிக்கு ரூ.3 வீதம் டேட்டா கட்டணம் செலுத்த வேண்டும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரு நாள் சேவை
ஏர்டெல் ஒரு நாள் ரோமிங் திட்டத்தில் அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் கனடா நாடுகளில் 300 எம்பி டேட்டா, அன்லிமிட்டெட் இன்கமிங் அழைப்புகளும் 100 நிமிடங்களுக்கு இந்திய அழைப்பு மற்றும் இந்தியாவிற்கு அன்லிமிட்டெட் குறுந்தகவல்கள் வழங்கப்படுகின்றது.

சிங்கப்பூர்
சிங்கப்பூர் நாட்டில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் ரூ.2499 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாள் திட்டம் ரூ.499 வசூலிக்கப்படுகின்றது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்திற்கு ரூ.3,999 எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications