Home
News

30 நாட்கள் சத்தமின்றி நடந்த சோதனை.. Airtel வாய்ஸ் காலிங் சேவையில் முக்கிய மாற்றம்.. இனி போன் வரும் போது!

சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் வாய்ஸ் காலிங் சேவையில், பிஸ்னஸ் நேம் டிஸ்பிளே (Business Name Display) என்கிற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் பயன் என்ன? இது எப்படி வேலை செய்யும்? இதோ விவரங்கள்:

இந்த அம்சத்தின் பயன் என்ன? இது வணிக நிறுவனங்களின் வெளிச்செல்லும் அழைப்புகளின் (Outgoing Calls) போது பெறுநரின் மொபைல் ஸ்க்ரீனில் தங்கள் பிராண்ட் பெயரை காட்ட அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். இந்த அம்சம் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்-ஆல் இயங்கும் ஸ்பேம் பில்டர்-ஐ பயன்படுத்தி, ஏர்டெல் பயனர்களுக்கு வரும் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை "சந்தேகத்திற்குரிய ஸ்பேம்" என அடையாளம் கண்டு வகைப்படுத்த, ஒரு தனியுரிம வழிமுறையை (proprietary algorithm) பயன்படுத்துகிறது.

Airtel வாய்ஸ் காலிங் சேவையில் முக்கிய மாற்றம்!

ஸ்பேம் என்று நினைத்து அல்லது தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை புறக்கணிக்கும் பழக்கத்தால் நம்பகமான பிராண்டுகளின் முக்கியமான அழைப்புகள் தவறவிடப்படுகின்றன. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் வங்கிகள், உணவு விநியோக சேவைகள், கூரியர் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து முக்கியமான அழைப்புகளை தவற விடுகின்றனர்.

இதை சரி செய்யவே பிஸ்னஸ் நேம் டிஸ்பிளே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது உங்களுக்கு கால் ய்யும் நிறுவனத்தின் பெயரை தெளிவாகக் காண்பிப்பதன் மூலம், உங்களுக்கான முக்கியமான கால்கள் தவறவிடப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது. இது வணிகங்கள் தனித்து நிற்க அனுமதிக்கும் அதே நேரத்தில் மோசடி செய்யும் அழைப்புகளிடமிருந்தும் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க உதவுகிறது.

பேங்க், ரீடெயில் ஸ்டோர், புட் டெலிவரி, மொபைலிட்டி, குவிக் காமர்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் 250 க்கும் மேற்பட்ட வணிகங்களுடன் இந்த அம்சம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வணிகங்கள் கடந்த 30 நாட்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் எண்களை பயன்படுத்தி 12.8 மில்லியன் அழைப்புகளைச் செய்தன; அதன் வழியாக இந்த அம்சம் வாடிக்கையாளர் ஈடுபாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏர்டெல் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை ஏர்டெல் நிறுவனம் அதன் போஸ்ட்பெய்டு சேவையின் கீழ் கிடைக்கும் ஒரு என்ட்ரி லெவல் பிளானில் முக்கிய மாற்றங்களை செய்து உள்ளது. இந்நிறுவனம் அதன் என்ட்ரி லெவல் இன்டர்நேஷனல் ரோமிங் (ஐஆர்) பேக்கில் ஒரு பெரிய திருத்தத்தை செய்துள்ளது. ரூ.649 மதிப்புள்ள பழைய ஐஆர் பேக்கை நீக்கிவிட்டு, உலகளவில் பயன்படுத்தக்கூடிய மற்றும் மேம்பட்ட டேட்டா நன்மைகளுடன் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏர்டெல் போஸ்ட்பெய்டு ஐஆர் பேக்கி விலை ரூ.648 ஆகும். 189 நாடுகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் இந்த திட்டம் அன்லிமிடெட் டேட்டாவுடன் தொகுக்கப்பட்டுள்ளது. அதாவது இதன்கீழ் 1ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும், அதன் பிறகு 80கேபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்

வாய்ஸ் காலிங் நன்மைகளை பொறுத்தவரை, இதன் கீழ் 100 நிமிட அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் அழைப்புகள் (உள்ளூர் மற்றும் இந்தியாவிற்கு) கிடைக்கும. எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தவரை இது இலவச இன்கமிங் எஸ்எம்எஸ், 10 அவுட்கோயிங் எஸ்எம்எஸ்களை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் ஆகும். சர்வதேச ரோமிங்கில் இருக்கும்போது செய்யப்படும் சர்வதேச அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.45 கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ரீசார்ஜ் செய்ய கிடைத்த ரூ.649 என்ட்ரி லெவல் திட்டம் இப்போது கிடைக்கவில்லை. நினைவூட்டும் வண்ணம் இது 500எம்பி டேட்டாவை மட்டுமே வழங்கியது. எனவே ஏர்டெல் இப்போது அதன் பேஸிக் ஐஆர் பேக்கின் டேட்டா நன்மையை 1ஜிபி ஆக இரட்டிப்பாக்கியுள்ளது; அதே நேரத்தில் அன்லிமிடெட் எப்யுபி பயன்பாடும் உள்ளது. ஒட்டுமொத்தமாக இது "பெட்டர்" ஆன ஐஆர் பேக் ஆக மாறியுள்ளது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Launched New Feature Business Name Display In Its Voice Calling Service What is The Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X