ஜியோவிற்கு டாட்டா காட்டிய ஏர்டெல்லின் புதிய எக்ஸ்ட்ரீம் ஹை-ஸ்பீட் பிராட்பேண்ட் டேட்டா திட்டம்!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபர் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் தற்போது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் என்ற புதிய பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது வெறும் ரூ.3,999 விலையில் 1 ஜிபி பெர் செகண்ட் வேகத்தில் அட்டகாசமான இன்டர்நெட் சேவை கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ஜியோ ஃபைபர் சேவை

ஜியோ ஃபைபர் சேவை

ஜியோ நிறுவனம், இந்த மாத துவக்கத்தில் தனது ஜியோ ஃபைபர் சேவைக்கான ஒரு மாத சந்தா திட்டங்கலின் விலை பட்டியலுடன் வருடாந்திர திட்டம் வரை அனைத்து திட்டங்களின் விலையையும் அறிமுகம் செய்தது. ஜியோ ஃபைபர் சேவை ரூ. 699 முதல் ரூ. 3999 வரை என்று பல சந்தா திட்டத்தில்அறிமுகம் செய்யப்பட்டது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஹை-ஸ்பீடு பிராட்பேண்ட் திட்டம்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஹை-ஸ்பீடு பிராட்பேண்ட் திட்டம்

தற்பொழுது ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஹை-ஸ்பீடு பிராட்பேண்ட் திட்டம் அன்லிமிடட் இன்டர்நெட் வசதியுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவையுடன், மூன்று மாத இலவச நெட்ஃப்ளிக்ஸ், ஒரு வருட அமேசான் ப்ரைம் சந்தா மற்றும் ZEE 5 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் அமைப்புக்கான சந்தா என அனைத்து புதிய சேவைகளையும் இத்திட்டத்தின் கீழ் வாரி வழங்கியுள்ளது.

நாசா ஹலோ மெசேஜ்க்கு விக்ரம் லேண்டர் ரியாக்க்ஷன்? இஸ்ரோ குஷி.!

இப்போதே இந்த பகுதிகளில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவை

இப்போதே இந்த பகுதிகளில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவை

இந்த புதிய ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை தற்போது முதற்கட்டமாக டெல்லி, ஃபரிதாபாத், ஹைதராபாத், மும்பை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, இந்தோர், ஜெய்ப்பூர் மற்றும் அஹமதாபாத் பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில மாதங்களில் அனைத்து நகரங்களிலும் இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை திட்டம் கொண்டு வரப்படும் என்று ஏர்டெல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் vs ஜியோ ஃபைபர்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஹை-ஸ்பீட் பிராட்பேண்ட் திட்டம், அன்லிமிடட் இன்டர்நெட் சேவையுடன் வெறும் ரூ. 3,999 விலையில் 1 ஜிபி வேகத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோ ஃபைபர் திட்டம் ரூ. 3999 விலையில் 2.5 டிபி டேட்டா சேவையை 1 ஜிபி வேகத்தில் FUP கட்டளைகள் உடன் பயனர்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

14 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டால் தற்கொலை! பெற்றோர்கள் கட்டாயம் படிங்க!14 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டால் தற்கொலை! பெற்றோர்கள் கட்டாயம் படிங்க!

ஜியோ ஃபைபர் இல் கிடைக்கும் சேவைகள்

ஜியோ ஃபைபர் இல் கிடைக்கும் சேவைகள்

ஜியோ ஃபைபர் சேவையுடன், வி.ஆர் சேவை, ஜியோ ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ, ஸ்பெஷல் ஸ்போர்ட்ஸ், பிளாட்டினம் பயனர்களுக்கு இலவச டிவி வீடியோ காலிங், ஹோம் நெட்வொர்க்கிங் மற்றும் இன்னும் பல சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனமும் இதற்கு நிகரான பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் ஃபைபர் இல் கிடைக்கும் கூடுதல் சேவைகள்

ஏர்டெல் ஃபைபர் இல் கிடைக்கும் கூடுதல் சேவைகள்

அதேபோல் ஏர்டெல் ஃபைபர் திட்டத்தின்படி, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயனர்களுக்கு ஆண்ட்ராய்ட் தளத்தில் இயங்கும் OTT ஸ்மார்ட் ஸ்டிக் மற்றும் ஆண்ட்ராய்ட் தளத்தில் இயங்கும் ஹைபிரிட் ஸ்மர்ட்பாக்ஸ் வழங்கப்படும். அத்துடன் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப் என 10,000 திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான சந்தா அனைத்தும் வழங்கப்படுகிறது.

டிக் டாக்கில் வைரலாகும் விநோத 'லிப்லாக் க்ளூ' சேலஞ்: இது எங்கபோய் முடியுமோ?டிக் டாக்கில் வைரலாகும் விநோத 'லிப்லாக் க்ளூ' சேலஞ்: இது எங்கபோய் முடியுமோ?

இன்-பில்ட் கிறோம்கேஸ்ட சேவை

இன்-பில்ட் கிறோம்கேஸ்ட சேவை

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சேவை, வைஃபை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் இன்-பில்ட் கிறோம்கேஸ்ட சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து பயனர்களுக்கும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் இணக்கத்துடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் கொடுக்கப்படுகிறது என்பது சிறப்பு.

எப்படி ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் வாங்கலாம்

எப்படி ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் வாங்கலாம்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவையைத் துவங்க நினைக்கும் பயனர்கள் ரூ.3999 செலுத்தி இந்த சேவையை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். அதேபோல் முந்தைய பயனர்கள் ஏர்டெல்டிஜிட்டல் பாக்ஸ்டிவியிலிருந்து, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவைக்கு மாற வெறும் ரூ.2749 மட்டும் செலுத்தினால் போதுமானது.

ரூ.27,000 வரை பிரைஸ் கட் உடன் மலிவு விலையில் ஐபோன் வாங்கலாம்! உடனே படிங்க!ரூ.27,000 வரை பிரைஸ் கட் உடன் மலிவு விலையில் ஐபோன் வாங்கலாம்! உடனே படிங்க!

ஏர்டெல் இன் முந்தைய பிராட்பேண்ட் திட்டங்கள்

ஏர்டெல் இன் முந்தைய பிராட்பேண்ட் திட்டங்கள்

இதற்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் ரூ.1099 திட்டத்தின் கீழ், 300 ஜிபி டேட்டா 500 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கி வந்தது. அதேபோல் ரூ.1,599 திட்டத்தின் கீழ் 600 ஜிபி டேட்டா சேவையை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கி வந்தது. ஏர்டெல் விஐபி திட்டமான ரூ. 1999 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தவிடுபொடியான அம்பானியின் திட்டம்

தவிடுபொடியான அம்பானியின் திட்டம்

தற்பொழுதுஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை நேரடியாக ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்பானியின் திட்டம் தவிடுபொடி ஆகியுள்ளது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Best Mobiles in India

English summary
Airtel Launched New Airtel Xstream Fiber broadband Data Program to Direct Rival With Jio Fiber : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X