ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று "ஆல் இன் ஒன்" திட்டம்- இணையம், ஓடிடி அணுகல், டிவி சேனல் சேவை!

|

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் ஆனது ஓடிடி இயங்குதளங்கள், டிவி சேனல்களுக்கான அணுகலுடன் 3 "ஆல் இன் ஒன்" திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது ரூ.699, ரூ.1099 மற்றும் ரூ.1599 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டங்களை தேர்வு செய்பவர்களுக்கு ஏர்டெல் 4கே ஹைப்ரிட் டிவி பாக்ஸ் மூலம் டிவி சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறது.

மூன்று புதிய எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்

மூன்று புதிய எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் மூன்று புதிய எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆல் இன் ஒன் என அழைக்கப்படும் புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் ரூ.699 ஆனது இணையம் மற்றும் 350-க்கும் மேற்பட்ட டிவி அணுகலை வழங்குகிறது. ஆல் இன் ஒன் புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களானது அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட 17 ப்ரீமியம் ஓவர் தி டாப் தளங்களுக்கான அணுகலை வழங்குகிறது. பயனர்கள் இந்த திட்டத்தில் கிடைக்கும் டிவி உள்ளடக்கம் மற்றும் ஓடிடி அணுகலை பெற ஏர்டெல் 4கே எக்ஸ்ட்ரீம் டிவி பாக்ஸை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

பிராட்பேண்ட் திட்டங்களின் விலை விவரங்கள்

பிராட்பேண்ட் திட்டங்களின் விலை விவரங்கள்

புதிய ஆல் இன் ஒன் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களின் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் ரூ.699, ரூ.1099 மற்றும் ரூ.1599 என இருக்கிறது. இந்த திட்டங்கள் மாதத்திற்கு 3333 ஜிபி என்ற பயன்பாட்டுக் கொள்கையுடனான வரம்பற்ற தரவுகளுக்கான அணுகலை வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற தரவுகளுடன் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களில் சோனிலைவ், ஈராோஸ் நவ், லயன்ஸ்கேட் ப்ளே மற்றும் ஹங்காமா ப்ளே உள்ளிட்ட 14 ஓவர் தி டாப் பயன்பாடுகளுக்கான ஒற்றை உள்நுழைவை வழங்கும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம்-க்கான அணுகலை வழங்குகிறது. ஏர்டெல் 4கே எக்ஸ்ட்ரீம் பாக்ஸை வாங்கிய பிறகு வாடிக்கையாளர்கள் பெறக்கூடிய 350-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அணுகலையும் இந்த திட்டங்கள் வழங்குகின்றன.

ஏர்டெல் பிளாக் பிரையாரிட்டி கேர்

ஏர்டெல் பிளாக் பிரையாரிட்டி கேர்

புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களுடன் ஏர்டெல் பிளாக் பிரையாரிட்டி கேரையும் வழங்குகிறது. மேலும் எங்கள் புதிய திட்டங்கள் இந்தியாவின் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை என பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வீர் இந்தர் நாத் குறிப்பிட்டார். இந்த தொகுப்புச் சலுகைகள் மூலம் எங்களது விவேகமான வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பு, வசதி உட்பட பலதரப்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார்.

ஏர்டெல் அறிவித்த புதிய திட்டங்களின் முழு விவரங்கள்

ஏர்டெல் அறிவித்த புதிய திட்டங்களின் முழு விவரங்கள்

ஏர்டெல் அறிவித்த புதிய திட்டங்களின் முழு விவரங்கள் குறித்து பார்க்கையில், ரூ.699 விலையில் கிடைக்கும் திட்டமானது 40 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வரம்பை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் கிடைக்கும் ஓடிடி சலுகைகள் குறித்து பார்க்கையில் இதில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் அணுகல் கிடைக்கிறது. அதேபோல் டிவி சேனல்களுக்கான அணுகல் குறித்து பார்க்கையில், இதில் ஏர்டெல் 4கே எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மூலம் 350 சேனல்களுக்கும் அதிகமான அணுகலை வழங்குகிறது.

அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம்

அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம்

ரூ.1099 விலையில் கிடைக்கும் திட்டமானது 200 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வரம்பை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் கிடைக்கும் ஓடிடி சலுகைகள் குறித்து பார்க்கையில் இதில் அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் உள்ளிட்ட அணுகல் கிடைக்கிறது. அதேபோல் டிவி சேனல்களுக்கான அணுகல் குறித்து பார்க்கையில், இதில் ஏர்டெல் 4கே எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மூலம் 350 சேனல்களுக்கும் அதிகமான அணுகலை வழங்குகிறது.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

அதேபோல் ரூ.1599 விலையில் கிடைக்கும் திட்டமானது 300 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வரம்பை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் கிடைக்கும் ஓடிடி சலுகைகள் குறித்து பார்க்கையில் இதில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் உள்ளிட்ட அணுகல் கிடைக்கிறது. அதேபோல் டிவி சேனல்களுக்கான அணுகல் குறித்து பார்க்கையில், இதில் ஏர்டெல் 4கே எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மூலம் 350 சேனல்களுக்கும் அதிகமான அணுகலை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Launched its 3 "All in One" Airtel Xstream Fiber Broadband Plans With OTT Platforms

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X