Home
News

ஜியோ ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள அலறும் ஏர்டெல்.!

ஜியோ அதன் டிடிஎச் சேவையை ஆரம்பிக்கவே இல்லை அதற்கு முன்பே ஏர்டெல் நிறுவனம் பதறிப்போய் என்னென்ன செய்துள்ளது என்பதை நீங்களே பாருங்களேன்.!

By Muthuraj

சமீபத்தில் (கடந்த வாரம்) விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிடிஎச் செட்-டாப் பாக்ஸ் புகைப்படம் ஒன்று லீக் ஆனது. இணையதளம் முழுவதும் ஒரு பெரிய சுற்று அடித்த அந்த புகைப்படத்தில் இருந்தே ஜியோ டிடிஎச் செட்-டாப் பாக்ஸ் அம்சங்களை அறிந்துக்கொள்ள முடிந்தது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் டிடிஎச் சேவையை ஆரம்பிக்கவே இல்லை அதற்கு முன்பே ஏர்டெல் நிறுவனம் பதறிப்போய் என்னென்ன செய்துள்ளது என்பதை நீங்களே பாருங்களேன்.!

முதலில் சிக்குவது ஏர்டெல் தான்

முதலில் சிக்குவது ஏர்டெல் தான்

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்கு பின்னர் இந்திய தொலைத்தொடர்பில் தனி சாம்பிராஜ்யம் நடத்தி வந்த ஏர்டெல் போன்ற பெரு நிறுவனங்களுக்கு எப்படி கட்டாயமாக விலைக்குறைப்பு ஏற்பட நேர்ந்ததோ அதே தான் டிடிஎச் சேவையிலும் ஜியோ ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பதிலும், அந்த புரட்சி புயலில் முதலில் சிக்குவது ஏர்டெல் டிடிச் சேவை தான் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.!

ஹைப்ரிட் டிடிஎச் எஸ்டிபி

ஹைப்ரிட் டிடிஎச் எஸ்டிபி

சமீபத்திய அறிக்கையின்படி, வைஃபை அல்லது பைபர் கேபிள் வழியாக ஆன்லைன் உலாவல் மற்றும் டிடிஎச் ஆதரவு வழங்கும் ஒரு ஹைப்ரிட் டிடிஎச் எஸ்டிபி-யை ஏர்டெல் நிறுவனம் தயார்படுத்தி வருவதாக அறியப்படுகிறது.

வி-பைபர் இணைய சேவை

வி-பைபர் இணைய சேவை

ஏற்கனவே நாடு முழுவதும் ஏர்டெல் நிறுவனமானது அதன் வி-பைபர் இணைய சேவையை துவங்கியுள்ளது என்பதை நாம் அறிவோம் இந்த சேவையானது அதன் டிடிஎச் சேவைக்கான மேலுமொரு பலமாக இருக்கலாம் என்றும் வெளிப்படையாக தெரிய வருகிறது.

உலக மேலாதிக்க உள்ளடக்க வழங்குநர்

உலக மேலாதிக்க உள்ளடக்க வழங்குநர்

மேலும் வெளியான அறிக்கையானது ஏர்டெல் இனி வரவிருக்கும் டிடிஎச் சேவைகளை எதிர்நோக்கும் பொருட்டு உலக மேலாதிக்க உள்ளடக்க வழங்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.

டிடிஎச் புரட்சி

டிடிஎச் புரட்சி

முன்னதாக, ஏர்டெல் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகிய இரு நிறுவனமும் ஒன்றுக்கூடி உள்ளடக்க சேவைகளை வழங்குமென்ற தகவல் வெளியானது. ஒருவேளை அது உண்மையாக மாறினால், நிச்சயமாக நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க டிடிஎச் புரட்சி உண்டாகும்.

தொடர்ச்சியான வளர்ச்சி

தொடர்ச்சியான வளர்ச்சி

எது உண்மையோ இல்லையோ ஏர்டெல் நிறுவனம் அதன் ஹைப்ரிட் டிடிஎச் எஸ்டிபி மூலம் ஆன்லைன் உள்ளடக்கம் பிரிவில் தொடர்ச்சியான வளர்ச்சியை நிகழ்த்த மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் புரட்சியை நடத்த முயல்கிறது என்பது தெளிவாக உள்ளது.

ஏர்டெல் தான் முன்னணி

ஏர்டெல் தான் முன்னணி

அறிக்கையின் படி, ஏர்டெல் அதன் தயாரிப்பின் இறுதி சோதனையில் உள்ளது, ஆக அதன் வெளியீடு விரைவில் நிகழும் என்று குறிப்பிட்டுள்ளது. இப்போது வரை, ஏர்டெல் தனது டிடிஎச் சேவையை 12.5 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது மற்றும் சந்தையில் ஏர்டெல் தான் முன்னணி வகிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ டிடிஎச் சேவை ரெடி.! நீங்க ரெடியா.?

Best Mobiles in India

English summary
Airtel to launch hybrid DTH STB to combat Jio's DTH service. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X