Home
News

அடுத்த 14 நாட்கள்.. Airtel, Jio, Vi சிம் வச்சிருந்தா இதை பண்ணிடுங்க.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

அடுத்த 14 நாட்களில் 2025 ஆம் ஆண்டு முடிகிறது. புது வருடம் பிறப்பதால் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு மவுசு அதிகரித்துவிட்டது. ஏனென்றால், இப்போதே ரீசார்ஜ் செய்துவிட்டால், அடுத்த வருடம் டெலிகாம் கட்டணங்களின் விலை உயர்ந்தாலும் இப்போது இருக்கும் விலையிலேயே சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஆகவே, 2025 ஆம் ஆண்டில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவில் கிடைக்கும் நல்ல சலுகைகளுடன் கிடைக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 1748 திட்டம் (Jio Rs 1748 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மட்டுமே கிடைக்கும். மேலும், 3600 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகையை பெற்று கொள்ளலாம். ஜியோவில் மலிவான விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டமாக இது இருக்கிறது.

அடுத்த 14 நாட்கள்.. Airtel, Jio, Vi சிம் வச்சிருந்தா இதை பண்ணிடுங்க!

ஜியோ ரூ 3599 திட்டம் (Jio Rs 3599 Plan): இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகை கொடுக்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்களின் சலுகையை கொடுக்கிறது.

ஜியோ ரூ 3999 திட்டம் (Jio Rs 3999 Plan): இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களின் சலுகை வருகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. மேலும், பேன்கோட் ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது. ஜியோ டிவி வழியாக பயன்படுத்தலாம்.

ஏர்டெல் ரூ 1849 திட்டம் (Airtel Rs 1849 Plan): இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். டேட்டா கிடைக்காது. 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. ஹலோ டியூன்ஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கிடைக்கிறது. இதை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 2249 திட்டம் (Airtel Rs 2249 Plan): இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். 30 ஜிபி டேட்டா கிடைக்கும். 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஹலோ டியூன்ஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.

ஏர்டெல் ரூ 3599 திட்டம் (Airtel Rs 3599 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ 3999 திட்டம் (Airtel Rs 3999 Plan): இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இதை 365 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஹலோ டியூன்ஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா உள்ளது.

விஐ ரூ 1849 திட்டம் (Vi Rs 1849 Plan): இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களின் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மற்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. குறிப்பிட்ட சர்க்கிள்களில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

விஐ ரூ 2249 திட்டம் (Vi Rs 2249 Plan): இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், 30 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். இதற்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது.

விஐ ரூ 3499 திட்டம் (Vi Rs 3499 Plan): இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இதை 365 நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், கூடுதலாக 50 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Jio Vodafone Idea With 365 Days Validity Unlimited Voice Calls Check Yearly Plan List 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X