ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா: ஒரு மாதம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனமும் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களில் ஒரு மாதம் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.259 திட்டம்
பயனர்களின் நலன் கருதி புதிய ரூ.259 ப்ரீபெய்டு திட்டத்தை ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த அட்டகாசமான திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளையும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.259 திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் நான்கு ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவுடன் வருகிறது இந்த 259 ரூபாய் திட்டம்.

ஜியோ ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும். இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்றவற்றிக்கான அணுகலை வழங்கியுள்ளது இந்த திட்டம்.

ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் டேட்டா தீர்ந்த பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். குறிப்பாக ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக், அமேசான் பிரைம் வீடியோக்களின் மொபைல் பதிப்பின் 30-நாள் இலவச சோதனை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய திட்டம். அதேபோல் ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதாவது இந்த திட்டம் மொத்தமாக 60ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக், அமேசான் பிரைம் வீடியோக்களின் மொபைல் பதிப்பின் 30-நாள் இலவச சோதனை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.327 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.327 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.327 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.337 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.337 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 28ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.327 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 31 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications