ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல்: ரூ.399 திட்டத்தில் வழங்கும் நன்மைகள் என்னென்ன?
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களும் தனித்துவமான சலுகைகளை வழங்குகின்றன என்றுதான் கூறவேண்டும்.

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலையால் ஒவ்வொரு நாளும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. எனவே பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியேவேலை செய்ய உள்ளனர். குறிப்பாக இதுபோன்று வீட்டில் இருந்து வேலை செய்யும் மக்களுக்கு வேண்டி டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பான திட்டங்களை வைத்துள்ளன என்று தான் கூறவேண்டும்.

அதாவது அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் வழங்குகின்றன. அதன்படி ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் ரூ.400-க்கு கீழ் வழங்கும் சிறப்பான திட்டங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பி.எஸ்.என்.எல் ட்யூனுக்கான சந்தா உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Jio ஆப்களுக்காண இலவச சந்தா உள்ளிட்ட அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
ஏரடெல் நிறுவனம் வழங்கும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் அடக்கம். அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக், அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷன் போன்ற சந்தாக்களும் இந்த திட்டத்துடன் இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், வி மூவிஸ், டி.வி சந்தா போன்ற நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வமான ஆப் வழியாக ரீசார்ஜ் செய்யும்போது பயனர்கள் 5 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications