Home
News

Airtel, Jio, Vi-க்கு கும்பிடு.. மாசத்துக்கு ரூ.145 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்!

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் சலுகையுடன் அடிமட்ட விலைக்கு தலா மூன்று திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டங்களில் 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையில் வேலிடிட்டி கிடைக்கிறது. ஜியோவில் மாதத்துக்கு ரூ.145 செலவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 1849 திட்ட விவரங்கள் (Airtel Rs 1849 Plan Details): இந்த ஏர்டெல் வாய்ஸ் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 12 மாதங்களுக்கான பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா கிடைக்கிறது. 3600 எஸ்எம்எஸ் சலுகைகள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது. மாதத்துக்கு ரூ.154 செலவாகிறது.

Airtel, Jio, Vi-க்கு கும்பிடு.. மாதம் ரூ.145 போதும்.. 336 நாட்களுக்கு!

ஏர்டெல் ரூ 469 திட்ட விவரங்கள் (Airtel Rs 469 Plan Details): இந்த ஏர்டெல் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் 900 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 12 மாதங்களுக்கான பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கொடுக்கப்படுகிறது. ப்ரீ ஹலோ டியூன்ஸ் கிடைக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு மற்றொரு திட்டம் உள்ளது.

ஏர்டெல் ரூ 189 திட்ட விவரங்கள் (Airtel Rs 189 Plan Details): இது கிட்டத்தட்ட வாய்ஸ் கால்கள் சலுகை கொண்ட திட்டமாக இருந்தாலும், 1 ஜிபி டேட்டா மட்டும் கொடுக்கிறது. 21 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் 300 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 12 மாதங்களுக்கான பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 1748 திட்ட விவரங்கள் (Jio Rs 1748 Plan Details): இந்த ஜியோ திட்டத்தில் 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகையை கொடுக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் கால்களை செய்து கொள்ளலாம். மாதத்துக்கு ரூ.145 செலவாகிறது.

ஜியோ ரூ 448 திட்ட விவரங்கள் (Jio Rs 448 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் 1000 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போல ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகை கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): ஏர்டெல்லை போலவே இந்த திட்டத்துக்கும் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆனால், 2 ஜிபி டேட்டா சலுகையும், 28 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கிறது. மேலும், 300 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகை கிடைக்கிறது.

விஐ ரூ 1849 திட்ட விவரங்கள் (Vi Rs 1849 Plan Details): இந்த திட்டமானது முதலில் பார்த்த ஏர்டெல் திட்டத்தை போலவே இருக்கிறது. ஏனென்றால், அதேபோல விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி, 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை கொடுக்கிறது. இதைத் தவிர வேறு சலுகைகள் இதில் கொடுக்கப்படவில்லை.

விஐ ரூ 470 திட்ட விவரங்கள் (Vi Rs 470 Plan Details): இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 900 எஸ்எம்எஸ்களின் சலுகை கிடைக்கிறது. இதைத்தவிர வேறு சலுகைகள் இதில் கிடைக்காது. இதைவிட மலிவான விலைக்கு அடுத்த திட்டம் கொடுக்கப்படுகிறது.

விஐ ரூ 199 திட்ட விவரங்கள் (Vi Rs 199 Plan Details): இந்த விஐ திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகளை பெற்று கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் மட்டும் போதுமானால், இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Jio Vi Voice Plans August 2025 Edition Check 365 Days Validity Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X