Home
News

Airtel, Jio, Vi-க்கு கும்பிடு.. இனி மாசம் ரூ.154 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய டெலிகாம் நிறுவனங்களின் சிம் கார்டுகளை வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் அடிமட்ட விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (Voice Only Plan) கிடைக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது. இதுபோக அந்தந்த நிறுவனங்களில் கிடைக்கும் பிரத்யேக சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த வாய்ஸ் திட்டங்களின் மாதாந்திர செலவு கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்க செய்யும்படி இருக்கிறது.

ஏர்டெல் ரூ 1849 வாய்ஸ் திட்டம் (Airtel Rs 1849 Voice Plan): இந்த ஏர்டெல் திட்டத்துக்கு வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ்கள் (SMS), அப்பல்லோ 24/7 சர்க்கிள், மற்றும் இலவச ஹலோ டியூன்ஸ் ஆகிய சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

Airtel, Jio, Vi-க்கு கும்பிடு.. இனி மாசம் ரூ.154 போதும்.. 365 நாட்கள்!

ஆகவே, வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகையை பெற்று கொள்ளலாம். முன்பே சொன்னதை போல 3600 எஸ்எம்எஸ் சலுகைகள் லம்ப்-சம் முறையில் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். இதுபோக 3 மாத மெம்பர்ஷிப் கொண்ட அப்பல்லோ 24/7 சர்க்கிள், மாதத்துக்கு ஒரு ஹலோ டியூன்ஸ் கிடைக்கிறது.

இந்த ஏர்டெல் வாய்ஸ் திட்டத்துக்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்று பார்த்தால், ரூ.154ஆக இருக்கிறது. இதுவே மலிவான விலையாக இருக்கிறது. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, இதைவிட மலிவான விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டத்தை வைத்திருக்கிறது. ஆனால், அதில் வேலிடிட்டி குறைவாக கிடைக்கிறது. இந்த திட்டத்தை இப்போது பார்க்கலாம்.

Airtel, Jio, Vi-க்கு கும்பிடு.. இனி மாசம் ரூ.154 போதும்.. 365 நாட்கள்!

ஜியோ ரூ 1748 வாய்ஸ் திட்டம் (Jio Rs 1748 Voice Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, முந்தைய திட்டத்தைவிட ரூ.101 விலை குறைவாக கிடைக்கிறது. ஆகவே, மாதத்துக்கு தேவைப்படும் தொகை அதைவிட மாலிவாக இருக்கும். ஆனால், ஏர்டெல்லில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால், இந்த ஜியோ திட்டத்துக்கு 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த வேலிடிட்டி தவிர வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையில் மாற்றங்கள் கிடையாது. ஆகவே, இந்த ஜியோ வாய்ஸ் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் இலவச ஹாலோடியூன்ஸ் கிடைக்கிறது. இதுபோக ஜியோவில் பிரத்யேகமாக கொடுக்கப்படும் சில ஆப்களின் சலுகை வருகிறது.

ஆகவே, ஜியோ டிவி (Jio TV), ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோ வாய்ஸ் திட்டத்துக்கான மாத செலவை கணக்கிட்டால், ரூ.145ஆக இருக்கிறது. இது 28 நாட்கள் வீதம் கணக்கிடப்பட்ட தொகையாகும். ஏர்டெல்லில் மாதத்துக்கு கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்து வோடபோன் ஐடியா வாய்ஸ் திட்டத்தை தெரிந்து கொள்ளலாம்.

Airtel, Jio, Vi-க்கு கும்பிடு.. இனி மாசம் ரூ.154 போதும்.. 365 நாட்கள்!

விஐ ரூ 1849 வாய்ஸ் திட்டம் (Vi Rs 1849 Voice Plan): இந்த விஐ வாய்ஸ் திட்டத்தில் ஏர்டெல்லில் கிடைத்த அதே சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கிறது. இதுபோக 360 எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுக்கிறது. மாத செலவு ரூ.154ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Jio Vi Voice Only Plans With 365 Days Validity Unlimited Voice Calls Check Monthly Cost
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X