Home
News

Jio, Airtel மற்றும் Vi கீழ் கிடைக்கும் பாக்கெட் பிரண்ட்லி திட்டம்.. அன்லிமிடெட் அழைப்புடன் கூடுதல் நன்மை..

பாக்கெட் பிரண்ட்லி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS என தேவையான முக்கிய நன்மைகளுடன், கூடுதலாக OTT தளத்திற்கான நன்மைகளுடன் செயல்படும் ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன விலையில் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். நீங்கள் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi என்ன எந்த பயனராக இருந்தாலும் சரி, உங்களுக்கான பாக்கெட் பிரண்ட்லி திட்டங்கள் இதுதான்.

ஏர்டெல் பயனர்களுக்கான பாக்கெட் பிரண்ட்லி திட்டம்

ஏர்டெல் பயனர்களுக்கான பாக்கெட் பிரண்ட்லி திட்டம்

ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பாக்கெட் பிரண்ட்லி திட்டம் என்றால் அது ரூ. 199 விலை கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தான். இந்த திட்டம் உங்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை 24 நாட்களுக்கு வழங்குகிறது. இத்துடன் அமேசான் மொபைல் பதிப்பிற்கான 30 நாள் இலவச சோதனை சந்தா, இலவச ஹலோ ட்யூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் போன்ற சேவையை வழங்குகிறது.

இந்த திட்டம் யாருக்கெல்லாம் பயனுள்ளதாய் அமையும்?

இந்த திட்டம் யாருக்கெல்லாம் பயனுள்ளதாய் அமையும்?

அதிக டேட்டா பயன்பாடு தேவையில்லை என்பவர்களும், அன்லிமிடெட் அழைப்பு நன்மை மட்டும் இருந்தால் போதும் என்பவர்களுக்கு இந்த திட்டம் சிறந்த திட்டமாக அமையும். இதே விலையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் Vi போன்ற பிற நெட்வொர்க்கிடம் இருந்து என்ன-என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். இந்த விலைப் பட்டியலின் கீழ் கிடைக்கும் திட்டங்களில் எந்த நிறுவனம் கூடுதல் நன்மையை வழங்குகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

ஜியோ ஏர்டெல் பயனர்களுக்கான பாக்கெட் பிரண்ட்லி திட்டம்

ஜியோ ஏர்டெல் பயனர்களுக்கான பாக்கெட் பிரண்ட்லி திட்டம்

ஜியோவிடம் இருந்து நமக்குக் கிடைக்கும் பாக்கெட் பிரண்ட்லி திட்டம் என்றால், அது உங்களுக்கு ரூ.199 விலையில் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS போன்றவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு JioTV, JioCinema போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் பயனர்களுக்குக் கிடைக்கிறது.

ஜியோ வழங்கும் ரூ.149 திட்டம் என்ன நன்மை தருகிறது?

ஜியோ வழங்கும் ரூ.149 திட்டம் என்ன நன்மை தருகிறது?

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் 1ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் 100 SMS நன்மை அடங்கிய திட்டத்தின் விலை ரூ. 199 என்பதை நாம் பார்த்தோம். இதே நன்மைகளை வழங்கும் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன் வசம் வைத்துள்ளது. இதன் விலை ஏர்டெல் வழங்கும் திட்டத்தை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ வெறும் ரூ.149 விலையில் 1ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் 100 SMS நன்மையை வழங்குகிறது.

Vi பாக்கெட் பிரண்ட்லி திட்டம்

Vi பாக்கெட் பிரண்ட்லி திட்டம்

இதேபோல், Vi நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பாக்கெட் பிரண்ட்லி திட்டம் என்றால் அது உங்களுக்கு ரூ.199 விலையில் கிடைக்கிறது. இத்திட்டம் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் 100 SMS ஆகியவற்றை 24 நாட்களுக்கு வழங்குகிறது. இது தவிர, இத்துடன் Vi மூவிஸ் மற்றும் Vi டிவிக்கான அணுகலுடன் இந்த திட்டம் கிடைக்கிறது. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில் ஜியோ ரூ.149 விலையில் அதிக நன்மை வழங்குவது தெளிவாகத் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Jio Vi Prepaid Recharge Plans Which Offers 1 GB Data and Unlimited Voice Call : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X